சிம்பு பட பாடல் செய்த மாஸ் சாதனை.. ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை: சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் யூட்யூபில் சாதனை படைத்திருக்கிறது.
ஒருசில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து சில வருடங்கள் ஒதுங்கியிருந்தார் சிம்பு. இருப்பினும் அவரது ரசிகர்கள் நிச்சயம் சிம்பு ரீ எண்ட்ரி கொடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தபடி இருந்தனர். இதனையடுத்து சினிமாவில் மீண்டும் நடிக்க திட்டமிட்ட அவர் தனது உடல் எடையை குறைத்தார்.

சிம்பு கொடுத்த ரீ எண்ட்ரி
அதனையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டைம் லூப்பை மையமாக வைத்து மாநாடு படம் உருவாகியிருந்தது. அப்படம் மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாயை வசூலித்தது. மாநாடு படம்தான் சிம்புவுக்கு தரமான கம்பேக் என அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

கௌதமுடன் இணைந்த சிம்பு
இதனையடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா என்ற க்ளாசிக் படத்தை கொடுத்த கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்தார் சிம்பு. ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த படத்துக்கு வெந்து தணிந்தது காடு என்று பெயரிடப்பட்டிருந்தது. அதில் சிம்பு முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படமும் ஹிட்டானது.

ரசிகர்களை வைப் செய்த மல்லிப்பூ பாடல்
படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பெரிதும் உதவியது. படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியது. குறிப்பாக மல்லிப்பூ என்ற பாடல் வெளியானதுமே ரசிகர்களை கவர ஆரம்பித்துவிட்டது. பாடலை மதுஸ்ரீ பாட பாடலாசிரியர் தாமரை அந்தப் பாடலை எழுதியிருந்தார்.

மல்லிப்பூ பாடல் செய்த சாதனை
மதுஸ்ரீயின் குரலும், தாமரையின் வரிகளும் ரசிகர்ளை கட்டிப்போட அந்தப் பாடலை பாடியும், பாடலுக்கு நடனமாடியும் பலரும் ரீல்ஸாக வெளியிட்டனர். சில மாதங்கள் சமூக வலைதளங்களை திறந்தாலே அந்தப் பாடல் குறித்த பேச்சாகத்தான் இருந்தது. இந்நிலையில் மல்லிப்பூ பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது யூட்யூபில் அந்தப் பாடல் இதுவரை 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்தத் தகவலை வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வெந்து தணிந்தது காடு 2 வருமா?
வெந்து தணிந்தது காடு படத்தில் வேலைக்காக மும்பை சென்று அங்கு கேங்ஸ்டராக ஹீரோ மாறுவது போல் கதை உருவாக்கப்பட்டிருந்தது. படத்தின் முடிவில் சிம்பு மிகப்பெரிய டானாக மாறியதுபோல் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் இதன் இரண்டாம் பாகம் வரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுகுறித்த அறிவிப்பை கௌதம் மேனனும் வெளியிட்டிருந்தார். ஆனால் அதற்கு அடுத்ததாக அதுகுறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
சிம்பு இப்போது பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயகக்த்தில் நடிக்கவிருக்கிறார். எனவே இந்தப் படங்களை முடித்துவிட்டு வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்பு கமிட்டாவார் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











