சிம்பு செம்ம பைஃட்… வெந்து தணிந்தது காடு 2ம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது!

சென்னை : வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சண்டைக் காட்சிகளில் சிலம்பரசன் மிகத் தீவிரமான, கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்றும், நிச்சயம் சிம்புவின் ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் சிலம்பரசனுக்கு அம்மாவாக ராதிகா நடித்து வருகிறார். சிம்புக்கு ஜோடியாக கயடு லோஹர் நடிக்கிறார்.

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

வரவேற்பை பெற்ற போஸ்டர்கள்

வரவேற்பை பெற்ற போஸ்டர்கள்

இந்த படத்திலிருந்து மொத்தம் 2 போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. முதல் போஸ்டரில் பின்னணியில் காடு எரிந்து கொண்டிருக்க, கையில் ஒரு கம்புடன் சாதாரண லுங்கி, அழுக்கு சட்டை, ரப்பர் செருப்பு அணிந்த ஒருவராக சிம்பு நின்று கொண்டிருக்கிறார். இரண்டாவது போஸ்டரில், ஒரு சிறிய அறையில் லுங்கி, பனியனுடன் கூலித் தொழிலாளர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டு இருக்க சிம்பு எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறார் இந்த இரண்டு போஸ்டர்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளன.

சிம்பு கடினமான உழைப்பு

சிம்பு கடினமான உழைப்பு

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிலம்பரசன் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2-ம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. 2ம் கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில், சண்டைக் காட்சிகளில் சிலம்பரசன் மிகத் தீவிரமான, கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார். நிச்சயம் சிம்புவின் ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மும்பையில் படப்பிடிப்பு

மும்பையில் படப்பிடிப்பு

இதையடுத்து, 2ம் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. 3ம் கட்டபடப்பிடிப்புக்காக மும்பை செல்ல உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதில் சிலம்பரசன் நாயகி கயடு லோஹர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க கெளதம் மேனன் திட்டமிட்டுள்ளாராம். மும்பையில் படப்பிடிப்பில் 15 நாட்கள் நடைபெறும் என்றும் அதன் பிறகு சென்னை திரும்பும் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பை திட்டமிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

பாதுகாப்பான படப்பிடிப்பு

பாதுகாப்பான படப்பிடிப்பு

இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி வருகிறார் என்பதும், கவிஞர் தாமரை பாடல் வரிகளில், சித்தார்த்தா நுனி என்பவரின் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பில் யாரும் புகைப்படங்கள் எடுக்காத வண்ணம் மிகவும் பாதுகாப்பான படப்பிடிப்பை நடத்தி வருகிறார் கௌதம் மேனன்.

வெளியீட்டுக்கு தயாராக உள்ளது

வெளியீட்டுக்கு தயாராக உள்ளது

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு படு பிஸியாக நடித்து வருகிறார். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இஸ்லாமிய இளைஞராக சிம்பு நடித்துள்ளர். மேலும் ஹன்சிகாவுன் மஹா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

Csk சிங்கங்களா

Csk சிங்கங்களா

பத்து தல, கொரோனா குமாரு போன்ற திரைப்படங்களை கையில் வைத்துள்ளார். கொரோனா குமார் படத்தின் டைட்டில் ப்ரோமா பாடல் நேற்று வெளியானது. Csk சிங்கங்களா... Csk செல்லங்களா... என்று சிம்பு தனது கம்மீரமான குரலில் பாடி உள்ளார். இணையத்தில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை மிகவும் மகிழ்வித்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X