“வெந்துதணிந்தது காடு“ இசை வெளியீட்டு விழா.. அட.. அவரும் வராராமே ?

சென்னை : நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு கௌதம் மோனன் சிம்புவுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

பட்டையை கிளப்பிய மாநாடு

பட்டையை கிளப்பிய மாநாடு

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு பலவிதமான சர்ச்சையில் சிக்கினார் சிம்பு. இதையடுத்து, இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படத்தில் 'வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேனு சொல்லு என்பது போல அட்டகாசமாக உடல் எடையை குறைத்து மாஸாக என்ட்ரி கொடுத்திருந்தார் சிம்பு. மாநாடு திரைப்படம் சிலம்பரசனுக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது. டைம் லூப் முறையில் உருவாக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் பட்டையை கிளப்பியது.

படப்பிடிப்பு முடிந்தது

படப்பிடிப்பு முடிந்தது

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, வெந்து தணிந்த காடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ராதிகா சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தி இத்நானி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூரில் தொடங்கி பின்னர் சென்னை மற்றும் மும்பையில் நடந்து முடிந்தது.

பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா

பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா

தற்போதைய தகவலின்படி வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் இசைவெளியீட்டு விழாவை நடித்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் அழைக்கும் திட்டம் இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெந்து தணிந்தது காடு செப்டம்பர் 15ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Recommended Video

T.Rajendar சீக்கிரமே சென்னை திரும்புகிறார்... உற்சாகத்தில் ரசிகர்கள் *Kollywood | Filmibeat Tamil
டிராஜேந்தர் குணமடைந்தார்

டிராஜேந்தர் குணமடைந்தார்

பத்து தலை படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சிம்பு இந்த படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தன்னுடைய தந்தையின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து டிஆர் பூரண குணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து, சிம்பு படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பி உள்ளதாகவும், டிராஜேந்தர் அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X