Don't Miss!
- Technology
ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- News
தமிழ்நாட்டிற்கு பதில் தமிழ்நாய்டு.. மத்திய அரசு இணையதளத்தில் எழுத்து பிழை.. பாமக ராமதாஸ் கண்டனம்
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
திரையரங்குகளில் அடிச்சு தூள் கிளப்பிய வெந்து தணிந்தது காடு… அடுத்து ஓடிடி ரசிகர்கள் ரெடியா?
சென்னை: சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வெந்து தணிந்தது காடு திரையரங்குகளில் 25 நட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
மேலும், வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்தும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெந்து தணிந்தது காடு சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன்… சிம்புவுக்கு அல்டிமேட் கிஃப்ட்!

மாஸ் காட்டிய சிம்பு
'மாநாடு' படத்திற்குப் பின்னர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் சிம்பு. மாநாடு சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து, கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் கமிட் ஆனார். இதில், வெந்து தணிந்தது காடு கடந்த 15ம் தேதி வெளியாகி, சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. அலட்டல் இல்லாத சிம்புவின் நடிப்பு பலருக்கும் ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது. அதேபோல் கெளதம் மேனனின் மேக்கிங், ஏஆர் ரஹ்மானின் மியூசிக் என எல்லாமே வெரைட்டியாக ரசிகர்களை கொண்டாட வைத்தது.

வெற்றிக் கொண்டாட்டம்
வெந்து தணிந்தது காடு பாக்ஸ் ஆபிஸில் 80 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட்டும் சென்னையில் நடைபெற்றது. இதில், சிம்பு, கெளதம் மேனன் ஆகியோருடன் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டார். சிம்பு பட சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் பங்கேற்றது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் சிம்புவுக்கு 90 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire) காரை அன்பளிப்பாக கொடுத்து அசரடித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

திரையரங்குகளில் 25 நாட்கள்
அதேபோல், வெந்து தணிந்தது காடு இயக்குநர் கெளதம் மேனனுக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கை பரிசாக கொடுத்தார். இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரையரங்குகளில் இன்று 25 நாட்களை கடக்கிறது. இதனை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், வெந்து தணிந்தது காடு இன்னும் திரையரங்குகளில் ஓடுவது சிம்பு ரசிகர்களிடம் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

ஓடிடி ரிலீஸ் தேதி
வெந்து தணிந்தது காடு படத்திற்கு கிடைத்த வரவேற்பு நடிகர் சிம்புவுக்கும் இயக்குநர் கெளதம் மேனனும் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இதனால் விரைவில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெந்து தணிந்து காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படம் தீபாவளிக்கு அமேசான் ப்ரைமில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனால், ஓடிடி ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.