Vendhu Thanindhathu Kaadu Box Office: வெந்து தணிந்தது காடு முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் தரமான கேங்ஸ்டர் படமாக வெளியாகி உள்ள வெந்து தணிந்தது காடு படம் முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுமார் 500 ஸ்க்ரீன்களுக்கு மேல் திரையிடப்பட்ட வெந்து தணிந்தது காடு முதல் நாளில் 80 சதவீதம் நிரம்பி படக்குழுவுக்கு வசூலை வாரிக் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் தான் பலம்

ஏ.ஆர். ரஹ்மான் தான் பலம்

கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ள சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு சிறந்த பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்து மிரட்டி எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். மறக்குமா நெஞ்சம், மல்லிப்பூ பாடல்களை படம் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். சண்டைக் காட்சிகளில் எல்லாம் அவரது பின்னணி இசை வேறலெவல் என பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

வித்தியாசமான சிம்பு

வித்தியாசமான சிம்பு

பெரியளவில் பஞ்ச் பேசாமல், ஓவர் ஆக்டிங் செய்யாமல், முத்துவாக இயல்பாக இந்த படத்தில் சிம்பு வாழ்ந்திருப்பதை பார்க்கத் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகின்றனர் என்று பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறியுள்ளனர். உடல் எடையை கணிசமாக குறைத்து 19 வயது இளைஞனாக அந்த முள் காட்டில் முள் வெட்டும் ஓப்பனிங் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் மிகப்பெரிய கைதட்டல்களை அள்ளி வருகின்றன.

வாய்ஸ் ஓவர் இல்லை

வாய்ஸ் ஓவர் இல்லை

இயக்குநர் கெளதம் மேனன் என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் ஏகத்துக்கும் வய்ஸ் ஓவர் நரேஷன் பண்ணியே அந்த படத்தைக் கெடுத்து விட்டார். அதனால், இந்த படத்தில் தனது வாய்ஸ் ஓவரை டோட்டலாக தூக்கியதும், ஆங்கில வசனங்களை வைக்காததுமே படத்தை வெற்றிப் படமாக மாற்றியுள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். கிளைமேக்ஸ் மட்டும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

சுமார் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வெந்து தணிந்தது காடு திரைப்படம் 10 முதல் 12 கோடி வரை முதல் நாளில் வசூலிக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் இந்த படம் முதல் நாளில் 7.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விடுமுறை தினம் இல்லை, வியாழக்கிழமை ரிலீஸ் என்பதால் இந்த தொகையே நல்ல ஓப்பனிங் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

காட்சிகள் அதிகரிக்கும்

காட்சிகள் அதிகரிக்கும்

படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மேலும், கூடுதல் காட்சிகள் அனைத்து ஏரியாவிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி படமான பிரம்மாஸ்திரம் உள்ளிட்ட கடந்த வார ரிலீஸ் படங்களுக்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்கள் குறைத்துக் கொண்டு வெந்து தணிந்தது காடு படத்துக்கு எக்ஸ்ட்ரா காட்சிகள் கிடைக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X