Vendhu Thanindhathu Kaadu Box Office: 6 நாளில் இத்தனை கோடியா? வெந்து தணிந்தது காடு வசூல் எவ்வளவு?
சென்னை: சிம்புவின் வெந்து தணிந்தது காடு தொடர்ந்து தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில், படத்தின் 6வது நாள் வசூல் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.

கேங்ஸ்டரான சிம்பு
சிம்பு, சித்தி இத்னானி நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ளது. மும்பையில் பரோட்டா கடையில் வேலை பார்க்கும் முத்து எப்படி சூழ்நிலை காரணமாக கேங்ஸ்டராக மாறுகிறான் என்பது தான் கதை. படத்திற்கு பாராட்டுக்களும் கலவையான விமர்சனங்களும் சரி விகிதத்தில் குவிந்துள்ளன.

அடுத்த பார்ட் பார்த்து பண்ணுங்க
- வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகத்தை இன்னமும் ஜன ரஞ்சகமாக எடுங்க என இயக்குநர் கெளதம் மேனனுக்கு நடிகர் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வைத்த கோரிக்கையும் சினிமா வட்டாரத்தில் ஏகப்பட்ட விவாதங்களை கிளப்பி உள்ளது. இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் கெளதம் மேனனை எதிர்த்து பெரும் சண்டையே போட்டு வருகிறார்.

ப்ளூ சட்டை மாறன் பஞ்சாயத்து
வெந்து தணிந்தது காடு ஒரு மொக்கைப் படம் என விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கும் அந்த படத்தின் இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் நடிகர் சிம்புவுக்கும் இடையே பெரும் பஞ்சாயத்தே நிலவி வருகிறது. தொடர்ந்து சோஷியல் மீடியாவில் சிம்பு மற்றும் கெளதம் மேனனை ட்ரோல் செய்து ட்வீட்களாக போட்டுத் தாக்கி வருகிறார்.

விமர்சனங்களை கடந்து
முதல் பாதி சூப்பர் என்றும் இரண்டாம் பாதி சுமார் என்றும் விமர்சனங்கள் கிளம்பினாலும், மொக்கைப் படம் என்று ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்தாலும், அதையெல்லாம் கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் வெந்து தணிந்தது காடு பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது.

6ம் நாள் வசூல்
இதுவரை இல்லாத அளவுக்கு சிம்புவுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை வெந்து தணிந்தது காடு கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். 6 நாளில் இதுவரை 58 கோடி வரை உலகளவில் படத்திற்கு வசூல் வந்துள்ளதாகவும் இந்தியாவில் மட்டும் 30 முதல் 35 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

100 கோடி தொடுமா
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு பெரிய போட்டியாக இந்த வாரம் எந்தவொரு படமும் வரவில்லை. அடுத்த வாரம் நானே வருவேன் மற்றும் பொன்னியின் செல்வன் என இரு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இந்நிலையில், இதே போல இந்த வார இறுதியிலும் வெந்து தணிந்தது காடு தாறுமாறாக ஓடினால் 100 கோடி கிளப்பில் இணைவது உறுதி.


Click it and Unblock the Notifications











