காரில் மாஸ் காட்டும் சிம்பு..வெந்துதணிந்தது காடு நீக்கப்பட்ட காட்சி.. இந்த சீனும் நல்லாத்தானே இருக்கு!
சென்னை : வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
செப்டம்பர் 15ந் தேதி வெளியான இத்திரைப்டம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்று வருகிறது.

வெந்து தணிந்தது காடு
வேலைக்காக மும்பை செல்லும் தமிழகத்தை சேர்ந்த இளைஞன் அங்கு எப்படி டான் ஆகிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றன.

மல்லிப்பூ
குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற மல்லிப்பூ பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அப்படத்தின் வெற்றிக்கும் அப்பாடல் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. தாமரையின் பாடல் வரிகளில் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடகி மதுஸ்ரீ இந்த பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

நீக்கப்பட்ட காட்சி இதுதான்
இந்நிலையில், வெந்துதணிந்தது காடு திரைப்படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் கூடுதல் பின்னணி இசையோ, ஒலியோ அல்லது சத்தமோ இல்லாமல் நிசப்தமாக பேசுவது மட்டுமே இடம் பெற்றுள்ளது. சாதாரண அப்பாவியாக சிம்பு இந்த காட்சியில் முக்கிய டானை சந்திக்கிறார். சிலம்பரசன் துப்பாக்கியை எப்படிப் பிடித்தார் என்பதை இந்த காட்சி விரிவாக கூறுகிறது. இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் இந்த சீனும் இருந்து இருந்தால் நல்லத்தான் இருந்து இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஓடிடியில் ரிலீஸ்
அதன்படி வெந்து தணிந்தது காடு திரைப்படம் தீபாவளிக்கு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் அக்டோபர் 13ந் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அமேசான் நிறுவனம் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











