சிம்புவின் “வெந்து தணிந்தது காடு“… முக்கிய தகவலை வெளியிட்ட படக்குழு!

சென்னை : சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்த முக்கியமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் சிம்புவுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டுக்காக காத்து இருக்கின்றனர்.

வித்தியாசமான ரோலில்

வித்தியாசமான ரோலில்

வெந்து தணிந்தது காடு படத்தில் முத்து என்ற முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு முன்பு திருச்செந்தூரில் ஆரம்பமானது. இந்தப் படத்திற்காக 20 கிலோ வரை உடல் எடை குறைத்து முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்பு. அண்மையில் வெளியான இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

முதல் சிங்கிள்

முதல் சிங்கிள்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திலிருந்து தாமரையின் பாடல் வரிகளில் முதல் சிங்கிள் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பத்து தல படத்தில்

பத்து தல படத்தில்

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் வெந்து தணிந்தது காடு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து பத்து தல படத்தில் படுபிஸியாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X