‘வெந்து தணிந்தது காடு‘ படத்தின் Glimpse வெளியாகும் தேதி அறிவிப்பு … மகிழ்ச்சியில் ரசிகர்கள் !
சென்னை : சிம்பு நடிக்கும் வெந்து தணிந்த காடு திரைப்படம் குறித்த அதிரிபுதிரித் தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சிம்புக்கு ஜோடியாக காயடுலோஹர் நாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் சிம்புவின் அம்மாவாக நடித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் 47 ஆவது படமாக உருவாகி வரும், இப்படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

வெந்து தணிந்தது காடு
நடிகர் சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றிக்கு பின்னர், மீண்டும் சுமார் 5 வருடங்கள் கழிந்து இணைந்து நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. சிம்பு இதுவரை ஏற்று நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வித்தியாசமாக
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , செகண்ட் லுக் போஸ்டர் வெளியாக மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. வெளியான இரு போஸ்டர்களும் மிகவும் வித்தியாசமாக இருந்தால், மக்கள் மத்தியில் இத்திரைப்படத்தின் மீதா ன எதிர்பார்ப்பு அதிகரித்தது. வழக்கமாக மனதை வருடும் காதல் திரைப்படங்களை மட்டுமே இயக்கிய கௌதம் மேனன் தனது பாணியிலிருந்து சற்று மாறி வெந்து தணிந்த காடு என்ற திரைப்படத்தை கொடுக்க உள்ளார்.

கையில் துப்பாக்கியுடன்
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சந்தூரில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இதையடுத்து,கையில் துப்பாக்கியுடன் நிற்கும் ஒரு புகைப்படத்தை சிம்பு தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்குவதாக தெரிவித்து இருந்தார்

Glimpse
இந்நிலையில் வெந்து தணிந்தகாடு திரைப்படத்தின் Glimpse டிசம்பர் 10ந் தேதி அன்று மதியம் 1.26மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











