Marriageக்கு ரெடி..சிம்புக்கு ரோஸ் கொடுத்த வெந்து தணிந்தது காடு ஹீரோயின்..யோசிச்சு சொல்லுங்க சிம்பு!
சென்னை : வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த நடிகை சித்தி இட்னானி சிம்புக்கு ரோஸ் கொடுத்து திருமணத்திற்கு ஒகே சொல்லி உள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கேங்ஸ்டர் படம் தான் வெந்து தணிந்தது காடு. ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசன், சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் ஆகியோர் இப்படத்தில் லீட்ரோலில் நடித்திருந்தனர்.

வெந்து தணிந்தது காடு
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் மூன்றாவது முறையாக இப்படத்தில் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை அடிப்படையாகக் கொண்ட உருவான இப்படத்தில் சிம்பு கேங்ஸ்டாரா நடித்து மிரட்டி இருந்தார்.

20 வயது இளைஞன் போல
இந்த படத்திற்காக நடிகர் சிம்பு கிட்டத்தட்ட 20 கிலோ வரை குறைந்து 20 வயது இளைஞர் போல காணப்பட்டார். 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 60 கோடிக்கு மேல் வசூலித்தது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மகாத்தான வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படக்குழுவினருக்கு கார், பைக் என பரிசுகளை வழங்கினார்.

யோசிச்சு சொல்லுங்க சிம்பு
இந்நிலையில், இத்திரைப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்த சித்தி இட்னானி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தொகுப்பாளினி மஞ்சள்,சிவப்பு, வெள்ளை நிற ரோஜாவை கொடுத்து இதை யாருக்கு கொடுப்பீங்க என்று கேட்டார். அதற்கு சித்தி, தமிழ்நாட்டில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர் சிம்பு தான். இதற்காக இந்த ரோசை சிம்புக்கு கொடுக்கிறேன். திருமணத்திற்கு நான் ரெடி என்று கூற, தொகுப்பாளினியோ சிம்பு சார் யோசித்து சொல்லுங்க என்று கூறியுள்ளார்.

க்யூட்டான நடிகை
நடிகை சித்தி இட்னானி முதல் படத்திலேயே தனது க்யூட்டான அழகால் ரசிகர்களை கவர்ந்து இழுந்துள்ளார். மும்பையில் பிறந்து இவர், மிஸ் இந்தியா சூப்பர் டேலேண்ட் பட்டம் வென்றவர். கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கில் உருவான 'ஜம்ப லகிடி பம்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.


Click it and Unblock the Notifications











