காலத்துக்கும் நீ வேணும்.. ஏ.ஆர். ரஹ்மானின் மயக்கும் இசையில் சிம்புவின் குரலில் சூப்பரான ஒரு பாட்டு!
சென்னை: விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களில் நடந்த மேஜிக் மீண்டும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை.
அந்த மறக்குமா நெஞ்சம் பாடலே இன்னமும் ரயில் போல ரசிகர்கள் நெஞ்சங்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த பாடலாக "காலத்துக்கும் நீ வேணும்" பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
கெளதம் மேனன் மற்றும் மணிரத்னம் மட்டும் எப்படி ஏ.ஆர். ரஹ்மானிடம் இருந்து இப்படி ரொமான்டிக் பாடல்களை வாங்குறாங்க என்கிற ரகசியத்தை அறிந்து கொள்ள ரசிகர்களை போலவே பல இயக்குநர்களும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் என்பது மிகையல்ல நிதர்சனம்.

சிம்பு கம்பேக்
உடல் எடையை குறைத்து மறுபடியும் நான் யாருன்னு காட்டுறேன் என மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தது மட்டுமின்றி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியையும் கடந்த ஆண்டு இறுதியில் கொடுத்திருந்தார் நடிகர் சிம்பு. மாநாடு படத்துடன் இந்த ஓட்டம் நின்று விடாது என்பதை நிரூபிக்கும் விதமாக வெந்து தணிந்தது காடு, பத்து தல என சூப்பரான லைன் அப்பை வைத்துக் கொண்டு கடுமையாக உழைத்து வருகிறார்.

ஓடிடி பிக் பாஸ்
கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதையும் நான் பண்ண ரெடி தான் பாஸ் என ஓடிடி பிக் பாஸ் ஆக களமிறங்கி பிக் பாஸ் அல்டிமேட் முதல் சீசனை வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தார். சினிமா ஷூட்டிங், ஓடிடி பிக் பாஸ் ஷூட்டிங், மும்பையில் போட்டோஷூட் என மாஸ் காட்டி வருகிறார்.

காலத்துக்கும் நீ வேணும்
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா நடிப்பில் உருவாகி வருகிறது வெந்து தணிந்தது காடு. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள காலத்துக்கும் நீ வேணும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. தாமரை வரிகளில் பல நாட்களுக்கு பிறகு முழுக்க முழுக்க ஒரு தமிழ் பாடல் கேட்பதே சுகமாகத்தான் இருக்கிறது. சிம்பு மற்றும் ரக்ஷிதா சுரேஷின் குரலில் பாடல் வேறலெவல் என்று தான் சொல்ல வேண்டும்.

மீண்டும் மேஜிக்
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மீண்டும் கெளதம் மேனன் - ஏ.அர். ரஹ்மான் - சிம்புவின் மேஜிக் இந்த படத்திலும் வொர்க்கவுட் ஆகி உள்ளது. இளைஞர்களின் காலர் ட்யூனாக அடுத்த நொடியே மாறும் விதமாக காலத்துக்கும் நீ வேணும் பாடல் அமைந்துள்ளது.

சிம்பு மேனரிஸம்
ஹீரோயினை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றால், நடிகர் சிம்புவின் வித்தியாசமான மேனரிஸம் சில காட்சிகளில் வந்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கிறது. 2010ம் ஆண்டு பார்த்த கார்த்தி மாதிரியே இன்னமும் அதே இளமையுடன் எப்படிடா மனுஷன் இருக்கான் என்று ரசிகர்கள் பாடலை டிரெண்ட் செய்யும் வேலையில் இறங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











