For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிம்புவின் வெந்து தணிந்தது காடு மேக்கிங் வீடியோ… படம் பற்றி ஜெயமோகன் சொன்ன சீக்ரெட்!

  |

  சென்னை: சிம்பு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்துக்கு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

  இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

  வாத்திய கலைஞர்களுடன் செண்டை மேளத்தை இசைத்த விக்ரம்.. சார் இதுகூட தெரியுமா உங்களுக்கு! வாத்திய கலைஞர்களுடன் செண்டை மேளத்தை இசைத்த விக்ரம்.. சார் இதுகூட தெரியுமா உங்களுக்கு!

  முத்து வீரனாக மாறிய சிம்பு

  முத்து வீரனாக மாறிய சிம்பு

  'மாநாடு' படத்துக்கு பின்னர் சிம்புவின் கேரியரில் தரமான மாற்றங்கள் நடந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு, ரசிகர்களின் வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. கெதளம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், எந்த இடத்திலும் சிம்பு தெரியாமல், முத்து வீரனே ரசிகர்களின் கண்களுக்குத் தெரிகிறார். அந்தளவுக்கு கேரக்டராகவே மாறிப் போன சிம்பு, கதைக்கு என்ன தேவையோ அந்த நடிப்பை மட்டுமே கொடுத்து மிரட்டியுள்ளார்.

  வசூலில் தொடர்ந்து சம்பவம் தான்

  வசூலில் தொடர்ந்து சம்பவம் தான்

  மூன்றாவது முறையாக இணைந்துள்ள சிம்பு, கெளதம் மேனன், ஏஆர் ரஹ்மான் கூட்டணி, ரசிகர்களுக்குத் தேவையான மேஜிக்கை அட்டகாசமாக செய்துள்ளனர். 'மல்லிப்பூ' பாடல் பட்டித்தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியான 6 நாட்களில் இதுவரை உலகம் முழுவதும் 58 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், படத்துக்கு கிடைத்த வரவேற்பால், விரைவில் இரண்டாம் பாகமும் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

  வெளியானது மேக்கிங் வீடியோ

  வெளியானது மேக்கிங் வீடியோ

  இன்னொரு பக்கம் வெந்து தணிந்தது காடு வெளியானதில் இருந்தே, கெளதம் மேனனுக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கும் இடையே பெரிய பஞ்சாயத்தே நடந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி சம்பவம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் மேக்கிங் வீடியேவை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற படத்தின் சக்சஸ் மீட்டிங்கில் பேசியிருந்த சிம்பு, "சீக்கிரம் மேக்கிங் வீடியோ ரிலீஸ் பண்ணுங்க கெளதம், அப்போது தான் நாம பட்ட கஷ்டம் என்னன்னு ரசிகர்களுக்கு தெரியும்" எனக் கூறியிருந்தார்.

  ஜெயமோகன் சொன்ன ரகசியம்

  ஜெயமோகன் சொன்ன ரகசியம்

  இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் மேக்கிங் வீடியோவில், எழுத்தாளர் ஜெயமோகன், பாடலாசிரியர் தாமரை, எடிட்டர் ஆண்டனி உட்பட படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பேசியுள்ளனர். அதில், எழுத்தாளர் ஜெயமோகன், "எனக்கு ஆக்சன், திரில்லர் படங்களில் விருப்பம் இல்லை, ரியலஸ்டிக்கான கதையாக தான் இந்தப் படம் வரவேண்டும் என நினைத்தேன். அதனை கெளதம் மேனனும் ஏற்றுக்கொண்டு அப்படியே செய்துள்ளார். மேலும், இந்த மோதல்கள் எல்லாமே நிலத்துக்காக தான் நடக்கின்றன. இவர்களைப் போன்ற கேங்ஸ்டர்களை போலீஸாரால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால், அவர்களை மோதவிட்டு அதுவே அவர்களுக்கான தண்டனை என விட்டுவிடுவார்கள்" எனக் கூறியுள்ளார்.

  அடுத்த மேக்கிங் வீடியோ எப்போது

  அடுத்த மேக்கிங் வீடியோ எப்போது

  வெந்து தணிந்தது காடு படத்தின் மேக்கிங் வீடியோவில் மேலும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது வெளியான மேக்கிங் வீடியோ முதல் பாகம் தான் என்பதால், இன்னும் அடுத்தடுத்து பல மேக்கிங் வீடியோக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தற்போது வெளியான வெந்து தணிந்தது காடு மேக்கிங் வீடியோவை சிம்பு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

  English summary
  Simbu starrer Vendhu Thanindhathu Kaadu is running successfully in theaters. The film crew has released the making video of this film. In it, the film crew shares the experiences of making the film Vendhu Thanindhathu Kaadu.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X