வெந்துதணிந்தது காடு அப்டேட்.. சிம்பு ஃபேன்ஸ் ரெடியா?..தரமான சம்பவம் காத்திருக்கு!
சென்னை : நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட் இன்று மாலை வெளியாக உள்ளது. அது என்ன அப்டேட் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். 'வெந்து தணிந்தது காடு' படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரகுமான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

சிம்புவுக்கு கம்பேக்
கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த சிலம்பரசனுக்கு மாநாடு ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது. வெங்கட்பிரபு இயக்கத்தில் டைம் லூப் முறையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. எத்தனையோ டைம் ட்ரேவல் திரைப்படத்தைப் பார்த்த நமக்கு இந்த டைம் லூப் முறை புதுமையானதாக இருந்தது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சொல்வது போல, வந்தான்.. சுத்தான்..செத்தான்.. ரிப்பீட்டுனு... நிறைய ரிப்பீட்டு இருந்தாலும் ரசிகர்களுக்கு குழப்பமே வராத அளவுக்கு எடிட்டிங் பக்காவாக செய்யப்பட்டிருந்தது.

படப்பிடிப்பு முடிந்தது
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, வெந்து தணிந்த காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக கடுமையாக ஒர்க்கவுட் செய்து சும்மா சிக்குனு மாறிவிட்டார் சிம்பு. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூரில் தொடங்கி பின்னர் சென்னை மற்றும் மும்பை நடந்து முடிந்தது.

தரமான அப்பேடட் மாலை
இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6.15 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனைத் தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களை யூகிக்குமாறு கூறியுள்ளது. அனேகமாகப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றன.
Recommended Video

படப்பிடிப்பில் கலந்து கொள்வார்
பத்து தலை படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சிம்பு இந்த படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தன்னுடைய தந்தையின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சிகிச்சை முடிந்த பிறகு ஜூலை மாதம் திரும்பியதும் சிம்பு மீண்டும் கிருஷ்ணா இயக்கிக் கொண்டிருக்கும் பத்து தலை படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











