மல்லிப்பூ வீடியோ பாடல் வெளியானது..ரிப்பீட் மோடில் பார்க்கும் ரசிகர்கள்!
சென்னை : பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்து அனைவரையும் முனுமுனுக்க வைத்த வெந்து தணிந்தது காடு படத்தில் இடம் பெற்ற மல்லிப்பூ பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
கடந்த 15ந் தேதி வெளியான இத்திரைப்டம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்று வருகிறது.

வெந்து தணிந்தது காடு
வேலைக்காக மும்பை செல்லும் தமிழகத்தை சேர்ந்த இளைஞன் அங்கு எப்படி டான் ஆகிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றன.

மல்லிப்பூ
குறிப்பாக மல்லிப்பூ பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அப்படத்தின் வெற்றிக்கும் அப்பாடல் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. பொருள் தேடி நீண்ட தூரம் சென்ற தன்னுடைய அன்புக்குரிய தலைவனின் பிரிவை தாங்க முடியாமல் தலைவி வாடுவதை இந்த பாடல் அழகாக உணர்த்தி உள்ளது.

ரம்மியமான குரலில்
தாமரையின் பாடல் வரிகளில் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடகி மதுஸ்ரீ இந்த பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார். அப்பாடல் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமானதற்கு காரணம் அந்த பாடலை பாடிய பாடகி மதுஸ்ரீயின் குரல் தான். ரம்மியமான குரலில் 'மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே..மச்சான் எப்போ வரப்போறா என்ற பாடல் உண்மையில் மனசை ஏதோ செய்துவிட்டது.

ரிப்பீட் மோடில்
இந்த நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'மல்லிப்பூ' வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது. மல்லிப்பூ லிரிக் வீடியோவை இதுவரை 12 மில்லியன் பேர் பார்த்துள்ள நிலையில் தற்போது வீடியோவை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் பார்த்து பார்த்து ரசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











