Don't Miss!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
“வெந்து தணிந்தது காடு“…சுடசுட வெளியான ரிலீஸ் தேதி..குஷியில் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு சுடச்சுட வெளியிட்டுள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு கௌதம் மோனன் சிம்புடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.
உங்க அம்மாவை கோபி டைவர்ஸ் செய்யப் போறாரு.. எழிலிடம் பற்றவைத்த ராஜேஷ்.. அடுத்தது என்ன?

சிலம்பரசன்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு பலவிதமான சர்ச்சையில் சிக்கினார் சிம்பு. படப்பிடிப்பிற்கு சரியாக வரவில்லை அவர் வீட்டு மாடியில் ஷூட்டிங்கை வைத்தாலும் சிம்பு கலந்துகொள்ளவில்லை என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன. அது மட்டும் இல்லாம் சிம்புவும் உடல் எடை கூடி அங்கிள் போல ஆகிவிட்டதால் இனிஅவர் அவ்வளவுதான் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் வலம் வந்தன.

மாஸ் என்ட்ரி
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படத்தில் 'வந்துடேனு சொல்லு திரும்ப வந்துடேனு சொல்லு என்பது போல அட்டகாசமாக உடல் எடையை குறைத்து மாஸாக என்ட்ரி கொடுத்திருந்தார் சிம்பு. மாநாடு திரைப்படம் சிலம்பரசனுக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது. டைம் லூப் முறையில் உருவாக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் பட்டையை கிளப்பியது.

படப்பிடிப்பு முடிந்தது
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, வெந்து தணிந்த காடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ராதிகா சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தி இத்நானி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூரில் தொடங்கி பின்னர் சென்னை மற்றும் மும்பை நடந்து முடிந்தது.

ரிலீஸ் தேதி
இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 15ந் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. மேலும், படத்திலிருந்து ஒரு சிறிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.அந்த வீடியோவில் ஹாஸ்டல் ரூமில் கையில் கட்டுடன் அமைதியாக அமர்ந்து இருக்கிறார் சிம்பு.

பத்து தல
பத்து தலை படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சிம்பு இந்த படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தன்னுடைய தந்தையின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சிகிச்சை முடிந்த பிறகு ஜூலை மாதம் திரும்பியதும் சிம்பு மீண்டும் கிருஷ்ணா இயக்கிக் கொண்டிருக்கும் பத்து தலை படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.