மறக்குமா நெஞ்சம்.. இசைப்புயல் குரலில் சிம்புவின் வெறித்தனத்தில் வெந்து தணிந்தது காடு டீசர் ரிலீஸ்
சென்னை: இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
முத்து கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் மீண்டும் மாநாடு படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் ஆனதாக துப்பாக்கி ஏந்திய கையுடன் சிம்பு புகைப்படம் வெளியிட்டு வைரலாக்கினார்.
#JourneyOfMuthu என்ற டீசரை தற்போது இயக்குநர் கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒல்லியான சிம்பு
மாநாடு படத்திற்காக மெலிந்ததை விட வெந்து தணிந்தது காடு படத்திற்காக மேலும், ஒல்லியாக சின்னப்பையன் போல சிம்பு மாறி உள்ளது ரசிகர்களை அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.

மாஸ் காட்டிய மாநாடு
பல ஆண்டுகள் கழித்து சிம்புவிற்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை மாநாடு படம் தேடி கொடுத்து இருக்கிறது. பத்து தல, வெந்து தணிந்தது காடு, மஹா, கொரோனா குமார் என அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்களில் பிசியாகி உள்ள சிம்பு தொடர்ந்து வெற்றிகளை கொடுக்க காத்திருக்கிறார்.

வெற்றி கூட்டணி
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் அதே வெற்றி கூட்டணியில் வெந்து தணிந்தது காடு படம் உருவாகி வருகிறது.

நண்பர்களை சுடுகிறாரா சிம்பு
வெந்து தணிந்தது காடு படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் லுங்கி அணிந்து கொண்டு பேச்சுலர்களுடன் ஒரு வீட்டில் சிம்பு வசிப்பது போல இருக்கும் புகைப்படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள டீசரில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கும் சிம்பு அதே நண்பர்களை ஒரு கட்டத்தில் துப்பாக்கி எடுத்து கன்னாபின்னாவென சுடும் காட்சிகள் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
Recommended Video

இசைப்புயல் குரலில்
"மறக்குமா நெஞ்சம்" என இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் குரலில் ஆரம்பிக்கும் டீசர் காட்சிகள் ஆக்ஷன் காட்சிகளாக கொலை வெறி தாக்குதலுடன் கெளதம் மேனன் சிக்னேச்சர் உடன் பக்காவாக மிரட்டி உள்ளது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து அடுத்த ஆண்டு சம்மருக்கு படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஹிட் லோடிங்
சிம்புவை இப்படித் தான் வித்தியாசமான கதைகளில் பார்க்க வேண்டும் என எதிர்பார்த்தோம். உடல் எடையை வெகுவாக குறைத்து விட்டு தனது முழு நடிப்பு ஆற்றலை களமிறக்கி உள்ளார் சிம்பு. வேற லெவல் ஆக்டிங் அடுத்த பிளாக்பஸ்டர் லோடிங் என சிம்பு ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications