“இதுல கதையே கிடையாது“..மிரட்டலாக வெளியானது வெந்து தணிந்தது காடு டிரைலர்!

சென்னை : சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.

ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் குஜராத்தி நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு, கௌதம் மேனன்

சிம்பு, கௌதம் மேனன்

சிம்பு,கௌதம் மேனன் கூட்டணியில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. இந்த படத்தில் சிம்பு, த்ரிஷாவின் கெமிஸ்டிரி பக்காவாக இருக்கும். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்த பாடலாக உள்ளது. அதே கூட்டணி அடுத்து அச்சம் என்பது மடமையடா படத்தில் இணைந்தது இந்தபடம் சுமாரான வரவேற்பை பெற்றது.

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

தற்போது கௌதம் வாசுதேவன், சிம்பு, ஏ.ஆர் ரஹ்மான் என்ற மூவர் கூட்டணி மூன்றாவது முறையாக நீண்ட இடைவெளிக்கு பிறகு வெந்து தணிந்தது காடு படத்திற்காக இணைந்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு மேல் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்திற்காக சிம்பு உடல் எடையை வெகுவாக குறைத்து சிறுவன் போல மொத்தமாக மாறினார்.

செப்டம் 15ந் தேதி ரிலீஸ்

செப்டம் 15ந் தேதி ரிலீஸ்

இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்திலிருந்து டீசர் மற்றும் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை தூண்டி உள்ளது.

பிரம்மாண்ட செட்

பிரம்மாண்ட செட்

இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்காக மட்டும் படக்குழு ரூ.3 கோடி செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது.

மாஸ் டிரைலர்

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிரைலரை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். டிரைலரின் சில சமயம் உண்மையை சொல்வது கதை சொல்வதைவிட கஷ்டம்..இது உண்மையான மனுஷனோட வாழ்க்கை என்று டிரைலர் மிகவும் மிரட்டலாக வெளியாகி உள்ளது. கௌதம் மேனனின் பின்னணி குரலில் டிரைலர் மிகவும் பிரம்பிக்காக உள்ளது. டிரைலரை சிம்புவின் ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.

இசை விழா

இசை விழா

வெந்து தணிந்தது படத்தின் நாயகன் சிம்பு, ஹெலிகாப்டர் மூலம் இசை வெளியீட்டு விழாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த மாஸ் என்ட்ரியை பார்த்த ரசிகர்கள் மட்டுமில்லாமல் கோலிவுட் பிரபலங்களே மிரண்டு போனார்கள். மேலும், ஆடியோ வெளியீட்டு விழாவில், சிம்பு, ராதிகா சரத்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், நாசர், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ஜீவா, ஆர்ஜே பாலாஜி, டிடி, கூல் சுரேஷ், வருண், ஆரவ்,விக்ரம் பிரபு, எப்ஐஆர் இயக்குநர் மனு ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினராக கமல், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X