தமிழகத்தில் டூர் அடிக்கும் வெந்து தணிந்தது காடு பேருந்து..சிம்புவும் வருகிறாரா?..ஆவலில் ரசிகர்கள்

சென்னை : நடிகர் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் வெந்து தணிந்தது காடு.

சிம்பு -கௌதம் மேனன் கூட்டணி முன்னதாக சிறப்பான படங்களை கொடுத்து ரசிர்களை கவர்ந்துள்ள நிலையில், மீண்டும் கூட்டணி அமைந்துள்ளது.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், படத்தின் பிரமோஷன் முடுக்கி விடப்பட்டுள்ளது.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ளது வெந்து தணிந்தது காடு படம். இந்தப் படத்திற்கு முன்னதாக விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்த இந்தக் கூட்டணி தற்போது ஹாட்ரிக் அடிக்கும்வகையில் வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளது.

இருவேறு கெட்டப்புகள்

இருவேறு கெட்டப்புகள்

இந்தப் படத்தில் இளம் வயது கிராமத்து கேரக்டர் மற்றும் மும்பையில் கேங்ஸ்டராக ஒரு கேரக்டர் என வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்திற்காக 21 வயது இளைஞன் கேரக்டரில் தோன்றுவதற்காக அவர் அதிகமாக மெனக்கெட்டுள்ளது படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் போஸ்டர்களில் வெளிப்பட்டுள்ளது.

வித்தியாசமான திரைக்கதை

வித்தியாசமான திரைக்கதை

படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகியுள்ளார் சித்த இத்னானி. மேலும் படத்தில் ராதிகா சரத்குமாரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். முன்னதாக சிம்புவை வைத்து காதல் படங்களை கொடுத்திருந்த கௌதம் மேனன் இந்தப் படத்தில் வித்தியாசமான திரைக்கதையுடன் களமிறங்கியுள்ளார்.

பிரம்மாண்டமான இசை வெளியீடு

பிரம்மாண்டமான இசை வெளியீடு

படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமான வகையில் நடைபெற்றது.

வெந்து தணிந்தது காடு பேருந்து

வெந்து தணிந்தது காடு பேருந்து

படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் பிரமோஷனை முடுக்கி விட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தின் பிரமோஷனையொட்டி கௌதம் மேனன் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். இதனிடையே, படத்தின் பிரமோஷனை மேலும் சிறப்பாக்கும்வகையில் வெந்து தணிந்தது காடு பேருந்து தமிழகத்தில் டூர் அடிக்கவுள்ளது.

கௌதம் மேனன் துவக்கி வைத்தார்

கௌதம் மேனன் துவக்கி வைத்தார்

இந்தப் பேருந்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் பேருந்தின் உள்ளே படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை ஓடவிடப்பட்டுள்ளன. இதனிடையே இந்தப் பேருந்தின் பயணத்தை படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் துவக்கி வைத்துள்ளனர்.

முத்துவின் பயணம் உங்கள் டவுன்களில்

முத்துவின் பயணம் உங்கள் டவுன்களில்

படத்தில் முத்து என்ற கேரக்டரில் சிம்பு நடித்துள்ள நிலையில், முத்துவின் பயணம் உங்களது டவுன்களில் வரவுள்ளது என்று இந்த பேருந்திற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பேருந்தின் பயணம் துவங்கியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ள வெந்து தணிந்தது காடு படத்திற்கான சிறப்பான விளம்பரமாக இந்த பேருந்து அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 படத்தின் பொருட்கள்

படத்தின் பொருட்கள்

இந்தப் பேருந்தின் வெளியேயும் உள்ளேயும் படத்தின் காட்சிகள் போஸ்டர்களாகவும், ஓவியங்களாகவும் தீட்டப்பட்டுள்ளன. மேலும் படத்தில் பயன்பபடுத்தப்பட்ட டிராவல்பேக், இசக்கி புரோட்டா, சைக்கிள், வயர் கூடை, தொரத்தி கம்பு, தலையணை உள்ளிட்டவையும் பேருந்தின் உள்ளே காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X