விடியற்காலை படம் பார்க்கும் ரசிகர்கள் தயவுசெய்து தூங்கிட்டு வாங்க.. ஏன் கௌதம் மேனன் இப்படி சொல்றாரு?

சென்னை : நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது வெந்து தணிந்தது காடு படம்.

இந்தப் படத்தை படத்தின் ரிலீசை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நாளைய தினம் அதிகாலை 5 மணி ஷோவிற்கான டிக்கெட்டுகளை புக் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷன்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. கௌதம் மேனன் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

சிம்பு -கௌதம் மேனன் கூட்டணி

சிம்பு -கௌதம் மேனன் கூட்டணி

நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் நாளைய தினம் வெளியாகவுள்ளது வெந்து தணிந்தது காடு படம். முன்னதாக இந்தக் கூட்டணியில் வெளியான அச்சம் என்பது மடமையடா மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா படங்களை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தை ஹாட்ரிக் வெற்றியாக்க சிம்பு மற்றும் கௌதம் மேனன் முனைப்பு காட்டி வருகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான சிம்புவின் மாநாடு படத்தின் அதிரி புதிரி வெற்றியும் வெந்து தணிந்தது காடு படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டை சமீபத்தில் வெளியிட்ட படக்குழு இந்தப் படத்தின் ப்ரமோஷனை சிறப்பான வகையில் தொடர்ந்து வருகின்றனர். வெந்து தணிந்தது காடு பேருந்தும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் படத்தில் பயன்படுத்தப்பட்ட சைக்கிள் உள்ளிட்ட பொருட்களும் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்ட காட்சிகளும் காணப்படுகின்றன.

கௌதம் மேனன் பகிர்வு

கௌதம் மேனன் பகிர்வு

இந்நிலையில் இந்தப் படம் குறித்து கௌதம் மேனன் சிறப்பான பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். தனக்கும் சிம்புவிற்கும் இடையிலான கெமிஸ்ட்ரி குறித்தும் அவர் பேசியுள்ளார். அவ்வாறு அவர் கொடுத்துள்ள பேட்டியொன்றில் படத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக இரவு தூங்கிவிட்டு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மாறுபட்ட கதைக்களம்

மாறுபட்ட கதைக்களம்

ஏனென்றால் தங்களுடைய வழக்கமான பாதையில் இருந்து வித்தியாசமான கதையை கொடுத்துள்ளதாகவும், இந்தக் கதை மற்றும் சிம்புவின் பயணத்தை பங்கு கொள்ள அதை புரிந்துக் கொள்ள தனியாக கவனமும் அவகாசமும் தேவைப்படும் என்றும் கௌதம் மேனன் கூறியுள்ளார்.

எதையும் யோசிக்காமல் படம்பார்க்க வேண்டும்

எதையும் யோசிக்காமல் படம்பார்க்க வேண்டும்

இந்தப் படத்தின் மூடைத்தான் ட்ரெயிலரில் கொண்டு வந்துள்ளதாகவும் ஆனால் படத்தை பார்க்கவரும் அதையெல்லாம் மறந்துவிட்டு படத்தை பார்க்க வேண்டும் என்றும் சிம்புவின் பயணத்தில் பங்கேற்கவேண்டும் என்றும் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் ரசிகர்களை பல்வேறு இடங்களில் சந்தித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X