Don't Miss!
- News
வாட்டர் டேங்கில் துர்நாற்றம்.. மேலே ஏறி பார்த்தவர்களுக்கு ‘ஷாக்’.. கடலூர் அருகே பரபரப்பு!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெந்து தணிந்தது காடு..ஆடியோ ரிலீஸ் எப்போது?..வெளியான லேட்டஸ்ட் தகவல்!
சென்னை : நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு கௌதம் மோனன் சிம்புவுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.
லிங்கா
எடுத்த
க்யூட்
போட்டோ..
அவருக்குள்ள
எவ்ளோ
அழகான
திறமையா..
வியக்கும்
ரசிகர்கள்!

கெத்தா வந்த சிம்பு
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு பலவிதமான சர்ச்சையில் சிக்கினார் சிம்பு. இதையடுத்து, இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படத்தில் "வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேனு சொல்லு" என்பது போல அட்டகாசமாக உடல் எடையை குறைத்து மாஸாக என்ட்ரி கொடுத்திருந்தார் சிம்பு. மாநாடு திரைப்படம் சிலம்பரசனுக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது. டைம் லூப் முறையில் உருவாக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் பட்டையை கிளப்பியது.

வெந்து தணிந்தது காடு
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ராதிகா சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தி இத்நானி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூரில் தொடங்கி பின்னர் சென்னை மற்றும் மும்பையில் நடந்து முடிந்தது.

5 விதமான கெட்டப்பில்
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவதும் முடிந்துள்ளது. இந்த படத்தில் முத்து என்ற முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு மற்றும் படத்தின் நாயகி சித்தி இத்நானி தனது டப்பிங்கை முடித்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர்..
Recommended Video

இசை வெளியீட்டு?
தற்போதைய தகவலின்படி வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படத்தின் இசை வெளியீடு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.