கடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி
Recommended Video

சென்னை: துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டியுள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சயீஷா, சத்யராஜ், பானுப்ரியா உள்ளிட்டோர் நடித்த கடைக்குட்டி சிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. குடும்பத்துடன் பார்க்கும் ஒரு நல்லபடமாக இது அமைந்துள்ளது.
கிராமத்து கதாபாத்திரம் என்று வந்தால் கார்த்தி அசத்திவிடுகிறார் என்று பெயர் எடுத்துள்ளார்.

பாராட்டு
கடைக்குட்டி சிங்கம் சின்னபாபு என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. படத்தை பார்த்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அதை பாராட்டி தெலுங்கில் ட்வீட் போட்டிருந்தார்.
நல்ல படம்
சின்னபாபு படம் பார்த்தேன். குடும்பம், கிராமப்புற சூழல், மரபுகள், வாழ்க்கை முறையை ஆபாசம் இல்லாமல் நல்ல முறையில் காட்டியிருக்கிறது என்று ட்வீட்டியுள்ளார் வெங்கையா நாயுடு.
கார்த்தி
வெங்கையா நாயுடுவின் ட்வீட்டை பார்த்த கார்த்தி அவருக்கு நன்றி தெரிவித்து தெலுங்கில் ட்வீட்டியுள்ளார்.
கவுரவம்
ஒரு துணை குடியரசுத் தலைவர் தங்களின் படத்தை பார்த்து பாராட்டியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா. வெங்கையா நாயுடுவுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











