தல தான் ஓகே சொல்லணும்: மங்காத்தா 2 பற்றி வெங்கட்பிரபு
மங்காத்தா 2 படத்திற்கு தல ஓகே சொல்லவேண்டுமென வெங்கட் பிரபு கூறியுள்ளார்
சென்னை: மங்காத்தா திரைப்படத்தின் ஏழாம் ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் மங்காத்தா. இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, பிரேம்ஜி, வைபவ், மகத், ஜெயபிரகாஷ் என பலர் நடித்திருந்தனர்.

மாசான எதிர்நாயகனாக அஜித் நடித்து கலக்கியிருந்தார். எப்போதுமே அஜித் ரசிகர்களுக்கும் அவருக்கும் முக்கியமான படமாக இருக்கும் மங்காத்தா ரீலீஸ் ஆகி ஏழு ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்பெல்லாம் எப்போது மங்காத்தா 2 எடுப்பார்கள் என்பது தான். இது தொடர்பாக வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளதைப் பார்த்தால் நான் ரெடியாதான் இருக்கேன் இன்னும் தல தான் ஓகே சொல்ல மாட்டேங்கிறார் என்பது போல் இருக்கிறது.
மங்காத்தா டே வாழ்த்துக்கள் என பதிவிட்டு நீங்கள் கேள்விகேட்பதற்கு முன்பே நான் சொல்லிடுறேன் தல தான் சொல்லணும் என ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











