என் பாட்டு சார்.. ஏக்கத்துடன் கேட்ட விக்னேஷ் சிவன்.. வெங்கட் பிரபு என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: குவாரண்டின் நேரத்தை ரசிகர்களுடன் ட்விட்டரில் செம ஜாலியாக செலவழித்து வருகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

Recommended Video

Maanadu Massive Update | S. J.Surya | Simbhu | Venkat Prabhu

சுஷ்மா சாமா நிக்காலோவை, சரோஜா சாமா நிக்காலோ என மாற்றி ஒரு பாட்டையும், படத்தையும் ஹிட் ஆக்கினார்.

அடுத்ததாக, 80களில் வருவது போன்ற பாடல்கள் ஏதும் இப்போது வருகிறதா? என பார்ட்டி படத்தில் இடம்பெற்ற பாடல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் கேள்வி எழுப்ப, தானா சேர்ந்த கூட்டம் பாட்டு ஓகேவா சார் என விக்னேஷ் சிவன் ட்வீட் போட்டுள்ளார்.

இளைஞர்களுக்கு பிடித்த

இளைஞர்களுக்கு பிடித்த

சென்னை 28, கோவா, சரோஜா, மங்காத்தா, பிரியாணி, சென்னை 28 2ம் பாகம் என இளைஞர்களை கவரும் பல படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. கடைசியாக அவர் இயக்கத்தில் உருவான பார்ட்டி படம் ரிலீசாகாமல் இருக்க, சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வருகிறார்.

தம்பிக்கு சான்ஸ்

தம்பிக்கு சான்ஸ்

வெங்கட் பிரபு படங்களில் ஹீரோ இருக்கிறாரோ இல்லையோ, நிச்சயம் அவரது தம்பி பிரேம்ஜி இருப்பார். தான் இயக்கும் அத்தனை படங்களிலும் தம்பி பிரேம்ஜியை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து ரசிகர்களின் கைதட்டல்களையும் பெற வைத்து விடும் மேஜிக் வெங்கட் பிரபுவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

போட்டுக் கொடு

போட்டுக் கொடு

தம்பிக்கு அண்ணன் வெங்கட் பிரபு எவ்வளவு தான் நல்லது செய்தாலும், அந்த நன்றியை மறந்து விட்டு, சமூக வலைதளத்தில் அண்ணன் வெங்கட் பிரபுவை போட்டுக் கொடுத்தே பெயர் வாங்கி விடுகிறார் பிரேம்ஜி. முதல்வன் படத்தை அண்மையில் பார்த்து விட்டு, வெங்கட் பிரபு செய்த மிகப்பெரிய மிஸ்டேக்கை ரசிகர்கள் அறியும் விதமாக வெளிப்படுத்தி அவரை மாட்டி விட்டுள்ளார்.

80ஸ் சாங்

அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் ஆக்டிவ் ஆகி வரும் வெங்கட் பிரபு, 80களில் வந்த பாடல்களை போல சமீபத்தில் எந்த பாடல் வந்திருக்கிறது என்பதை அறிய தான் ஆர்வமாக இருப்பதாகவும், தன்னுடைய ஃபேவரைட் லிஸ்டில் இருப்பது, பார்ட்டி படத்திற்காக பிரேம்ஜி இசையில் எஸ்.பி.பி மற்றும் சித்ரா பாடியுள்ள "கொடி மாங்கனி" பாடல் தான் என்றுள்ளார்.

என் பாட்டு சார்

மெஹந்தி சர்கஸ் படத்தில் இடம்பெற்ற "கோடி அருவி" பாடல் முதல் பல பாடல்களை ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். சிலர் ரீமேக் பாடல்களை சொல்ல, அதை தான் கேட்கவில்லை என்றும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இந்நிலையில், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் "பீலா பீலா" பாட்டு செலக்ட் பண்ணுவீங்களா சார் என விக்னேஷ் சிவன் ட்வீட் போட்டுள்ளார்.

என்ன சொன்னார் தெரியுமா?

கண்டிப்பா ப்ரோ.. உங்களோட வரிகளில் உருவான அந்த பாடல், அப்படியே குழந்தை பருவத்துக்கு கூட்டிட்டு போயிடுச்சு என விக்னேஷ் சிவன் கோரிக்கைக்கு செவி சாய்த்து பதிலளித்துள்ளார் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவனின் இந்த சாட்டிங்கை ரசிகர்கள் வெகுவாக ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X