பா.ரஞ்சித் இதை செய்ய வேண்டும்.. GOAT வெங்கட் பிரபு சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?

சென்னை: பா.இரஞ்சித் கடைசியாக இயக்கிய படம் தங்கலான். அந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸானது.மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேசமயம் வசூலில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் பா.ரஞ்சித்தின் குருநாதரான வெங்கட் பிரபு ரஞ்சித்துக்கு சில அட்வைஸ்களை செய்திருக்கிறார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்து அட்டகத்தி படத்தில் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித் கடைசியாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கியிருந்தார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருந்தார். எப்போதும் வித்தியாசமாக கதை தேர்வை செய்யும் விக்ரம் பா.ரஞ்சித்துடன் இணைந்திருந்தது பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்தது.

pa ranjith venkat prabhu

அதிர்வு தரும் ரஞ்சித்: கோலார் தங்க வயலில் சுதந்திரத்துக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடி தமிழ் மக்கள் எப்படியான வலிகளையும், வேதனைகளையும் சந்தித்தார்கள் என்பதை பா.ரஞ்சித் இந்தப் படத்தில் தொட்டிருக்கிறார். சமூகம் சார்ந்த விஷயங்களை ரஞ்சித் தொட்டால் அது பெரும் அதிர்வுகளை உண்டு பண்ணும். இப்போது அவர் கேஜிஎஃப்பை தொட்டிருப்பதால் கண்டிப்பாக கன்னடத்தில் வந்த கேஜிஎஃப்பை விடவும் ரஞ்சித் காட்டப்போகும் கேஜிஎஃப் அதிர்வை உண்டாக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

கலவையான விமர்சனம்: படமானது கடந்த 15ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இந்தப் படமும் சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் ஒருதரப்பினரோ தங்களது எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்று கூறிவருகிறார்கள். இப்படி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டது.மொத்தம் நூறு கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இதனால் படக்குழு செம ஹேப்பி.

அடுத்த படம்: தங்கலான் படத்தின் வெற்றியை அடுத்து ஸ்டூடியோ க்ரீன் பேனருக்கே தனது அடுத்த படத்தையும் செய்கிறார் ரஞ்சித். அந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு ஜெர்மன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன் பூஜை சமீபத்தில் நடந்தது. கார்த்திக்கு எப்படி மெட்ராஸ் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தாரோ அதேபோல் சூர்யாவுக்கு ஜெர்மன் படத்தை மெகா ஹிட்டாக கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

வெங்கட் பிரபு பேட்டி: இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் உருவாகியிருக்கும் GOAT படம் வெளியாகவிருக்கிறது. அதனையொட்டி வெங்கட் பிரபு பல பேட்டிகளை கொடுத்துவருகிறார். அந்த வகையில் அவர் அளித்த பேட்டியில் ரஞ்சித் குறித்து பேசிய அவர், "என்னிடம் பா.ரஞ்சித் உதவி இயக்குநராக வேலை செய்தார் என்று நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர் இயக்கிய மெட்ராஸ், சார்பட்டாபரம்பரை போன்ற படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

கமர்ஷியல் இயக்குநர்: எனக்கு அரசியல் தெரியாது. எனவே அதில் இருக்கும் அரசியலை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ரஞ்சித்திடம் நான் ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொல்வேன். அவர் ஒரு கமர்ஷியல் படம் எடுக்க வேண்டும். அதை அவரிடமும் சொல்லியிருக்கிறேன். ஏனெனில் அவருக்குள் மிகப்பெரிய கமர்ஷியல் இயக்குநர் ஒருவர் இருக்கிறார். அரசியல் கருத்துள்ள படம் அவர் எடுத்தாலும் அப்பப்போ கமர்ஷியல் படங்களையும் ரஞ்சித் எடுக்க வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X