GOAT First Review: கன்ஃபார்மா பிளாக்பஸ்டர் தான்.. கோட் படத்தின் முதல் விமர்சனம்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடித்துள்ள கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும்,ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் 5ந் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி, விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில், கல்பாத்தி எஸ்.அகோரம் கல்பாத்தி எஸ். கணேஷ் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் கோட். இப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது திரைப்படமாகும்.இப்படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ,ஜெயராம், யோகி பாபு ,யுகேந்திரன், பார்வதி நாயர் ,அரவிந்த் ஆகாஷ், கஞ்சா கருப்பு என பலர் நடித்துள்ளனர்.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்தது.

goat review vijay

முதல் விமர்சனம்: இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இத்திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் விமர்சனம் UK சென்சாரில் இருந்து வெளியாகியுள்ளது. இப்படத்தின் விநியோகஸ்தர் படம் குறித்து பிரத்தியேகமாக தகவலை ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார். அதில், #TheGreatestOfAllTime UK இல் '15' சான்றிதழைப் பெற்றுள்ளது என்றும், நடிகர்களை ஆரம்பத்திலேயே இயக்குநர் அறிமுகப்படுத்திவிட்டதால்,படம் ஆரம்பித்த 15 நிமிடத்தில் இருந்தே கதை பரபரப்பாக மற்றும் வெறித்தனமாக இருக்கிறது.

இடைவேளைக்குப் பிறகும் எங்கேயும் கதை தேங்கி நிற்காமல் கிளைமாக்ஸ் வரை ஜெட் வேகத்தில் செல்வதாக தணிக்கை குழு அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.மேலும் கொஞ்சம் கூட போர் அடிக்கவே இல்லை, குறிப்பாக விஜய் 3 வேடங்களிலும் மிரட்டி இருக்கிறார். இப்படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்கும் என்று பாராட்டி உள்ளார்.

படத்தின் அடுத்தடுத்த அப்டேட்: கோட் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் எதிர் பார்த்திருந்த நிலையில், இசைவெளியீட்டு விழா ஏதும் நடத்தப்படாத நிலையில், டிஜிட்டல் முறையில் மிகத்தீவிரமாக ப்ரோமோஷன் வேலையை படக்குழு செய்து வருகிறது. அந்த வகையில், மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை செயற்கை நுண்ணறிவு மூலமாக படத்தில் கொண்டு வந்துள்ளது படக்குழு. சிவகார்த்திகேயன், த்ரிஷா உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் படத்தின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக வெங்கட் பிரபு வெளியிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X