Vijay - விஜய் சூப்பர் ஸ்டாரா? தளபதியா?.. வெங்கட் பிரபு சொன்ன சூப்பர் பதில்
சென்னை: Venkat Prabhu (வெங்கட் பிரபு) விஜய் சூப்பர் ஸ்டாரா இல்லை தளபதியா என்ற கேள்விக்கு வெங்கட் பிரபு பதிலளித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். மேலும் வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்கலாம் என தெரிகிறது. முன்னதாக வெளிநாட்டில் நடக்கும் என்றும் ஒரு பேச்சு உலாவியது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68: இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார். அதன்படி படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்துக்கான கதையை சிறப்பாக உருவாக்கும் பணியில் வெங்கட் இப்போது ஈடுபட்டிருக்கிறார்.
என்ன கதை: விஜய்யின் சமீபத்திய மூவ்கள் அரசியலை நோக்கி இருப்பதால் இந்தப் படம் அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும் மாநாடு படத்தை அரசியல் கதைக்களத்தில் இயக்கி வெங்கட் பிரபு மெகா ஹிட்டாக கொடுத்திருந்ததால் இந்தப் படமும் அப்படி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் ட்ரெய்லரையோ, டீசரையோ பார்த்தால்தான் என்ன கதை என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும்.

வெங்கட் பிரபு பதில்: இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த வெங்கட் பிரபு, "லியோ படம் வெளியான பிறகுதான் இந்தப் படத்திற்கான அப்டேட்டுகள் வெளியே வரும். இது நல்ல ஜாலியான எண்ட்டெர்டெயின்மெண்ட் படமாக இருக்கும். அரசியல் சம்பந்தமாக இது இருக்காது. இப்போது லியோவில் முழு கவனத்தை செலுத்துவோம்.
சூப்பர் ஸ்டார் நோ: எனது படத்தில் சூப்பர் ஸ்டார் விஜய் என்ரெல்லாம் போடமாட்டேன். தளபதி விஜய் என்றுதான் போடுவேன். அதைத்தான் ரசிகர்களும் விரும்புவார்கள். நான் இயக்கப்போகும் படத்தில் மெசேஜ் எல்லாம் இருக்காது. எப்போதும் போல எனது ஸ்டைலில் ஜாலியான படமாக அமையும்" என்றார்.


Click it and Unblock the Notifications











