twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திடீரென கூடிய மக்கள் கூட்டம்.. 4 நாளைக்கும் பிரியாணி சமைக்க போறாங்களா? வெங்கட்பிரபு கிண்டல்!

    |

    சென்னை: 4 நாட்கள் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தொடர்ந்து சென்னை மக்கள் கடைகளில் திடீரென கூட்டமாக கூடியதை இயக்குநர் வெங்கட் பிரபு கண்டித்திருக்கிறார்.

    Recommended Video

    காற்றில் பறந்த சமூக இடைவெளி... அத்தியாவசிய பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்

    ஏற்கனவே முழு ஊரடங்கில் தான் தமிழ்நாடு இருக்கிறது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கடைகளும் இருக்காது என அரசு போட்ட உத்தரவால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    லாக்டவுன்குள்ள லாக்டவுனா? மோசமான யோசனை.. மேலும் பாழாக்கும்.. கூட்டத்தை பார்த்து கடுப்பான நடிகை!லாக்டவுன்குள்ள லாக்டவுனா? மோசமான யோசனை.. மேலும் பாழாக்கும்.. கூட்டத்தை பார்த்து கடுப்பான நடிகை!

    சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதால் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம். இந்நிலையில், இப்படி மக்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல், பயத்தின் காரணமாக கூடி, வைரஸை தான் வாங்கி வருவார்கள் என்றுள்ளார்.

    டிரெண்டாகும் ஹாஷ்டேக்

    டிரெண்டாகும் ஹாஷ்டேக்

    சென்னையில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில், அரசு திடீரென அறிவித்த இந்த அறிவிப்பால், சென்னை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் கடைகளை முற்றுகையிட திரண்டனர். சென்னையில் இதுநாள் வரையில் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்கள் எல்லாம் மளிகை பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக கூடியிருப்பது #panicbuying என்ற ஹாஷ்டேக் டிரெண்டாக காரணமாக அமைந்து விட்டது.

    கொரோனா வாங்குறாங்க

    கொரோனா வாங்குறாங்க

    அந்த ஹாஷ்டேக்கில் பலரும் இவர்கள் எல்லாரும் காய்கறிகள் வாங்குகிறார்களோ இல்லையோ, கொரோனாவை நிச்சயம் வாங்கிட்டு வீட்டுக்கு போயிடுவாங்க என்றும், கொரோனா மார்க்கெட் என்றும், அரசின் திட்டமிடாத அறிவிப்பால் வந்த வினை என்றும் பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை பதிவிட்டு தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    4 நாளும் பிரியாணி

    4 நாளும் பிரியாணி

    வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா, ராம்கி, பிரேம்ஜி நடிப்பில் வெளியான படம் பிரியாணி. வெங்கட் பிரபுவுக்கும் மிகவும் பிடித்த உணவு பிரியாணி. அதனை மனதில் வைத்துக் கொண்டு, இவ்வளவு கூட்டமாக மக்கள் அள்ளிப் போட்டு மளிகை பொருட்களை வாங்குவதை பார்த்தால், 4 நாட்களும் வீட்டில் பிரியாணி தான் போலயே எனவும் கலாய்த்துள்ளார்.

    உனக்கென்னப்பா

    உனக்கென்னப்பா

    வெங்கட் பிரபுவின் இந்த ட்வீட்டை பார்த்தவுடன் ஒரு நெட்டிசன், உனக்கென்னப்பா வீட்டிலேயே பல மாதங்களுக்கு தேவையான அனைத்து விதமான ஐட்டங்களையும் வாங்கி தேக்கி வைத்திருப்பீர்கள் என்ற அர்த்தத்துடன் கமெண்ட் செய்ய, அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, ரசம் சோறு போதும் ப்ரோ.. பாதுகாப்பு முக்கியம் என பதிலளித்துள்ளார்.

    வித்தியாசம் இருக்கு

    வித்தியாசம் இருக்கு

    இந்த கொரோனா அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை கொடுத்தாலும், லாக்டவுனில் சிக்கித் தவிக்கும் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்வதில்லை. பணக்காரர்களின் நிலை வேற, ஏழை மக்களின் நிலை வேற, அவர்கள் எல்லாரும் பிரியாணி சமைக்க மட்டுமே கடைகளுக்கு இப்படி முண்டியடித்துக் கொண்டு செல்வதில்லை என வெங்கட் பிரபுவின் கருத்துக்கு எதிரான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

    English summary
    After hearing 4 days complete lockdown in some TamilNadu districts. Chennai people gathering markets, Shops and buying groceries. Venkat Prabhu criticize the panic buying of the people.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X