சிம்புவை இயக்கும் வெங்கட் பிரபு: பில்லா 3-ஆ, உண்மை என்ன?
Recommended Video

சென்னை: சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டின் பிசியான நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் சிம்பு. மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அவர் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளார்.
வெங்கட் பிரபு, சிம்புவா அப்படி என்றால் பில்லா 3 படமாக தான் இருக்கும் என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர்.
சிம்பு
தானும், சிம்புவும் சேர்ந்து பணியாற்றும் படம் எந்த படத்தின் அடுத்த பாகமும் கிடையாது. இது புதுக் கதை என்று இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
ஃபர்ஸ்ட் லுக்
வெங்கட் பிரபுவின் ட்வீட்டை பார்த்த தமிழ் படம் 2 இயக்குனர் சி.எஸ். அமுதன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டால் வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேன்
துருவங்கள் 16 படம் புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கார்த்திக் நரேன் படம் சிம்புவுக்கு புது அடையாளத்தை கொடுக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.

நான் யாருமில்ல
தமிழ் படம் 2 படத்தில் வரும் ஹீரோ அறிமுக பாடலில் சிம்புவை கலாய்த்திருந்தனர். அது போதவில்லை என்று அவரின் புதுப்படத்தை கலாய்க்க ஆவலாக உள்ளார் அமுதன். நல்லா வருவீங்க சார்.


Click it and Unblock the Notifications











