Thalapathy 68 - தளபதி 68 பூஜை.. எனக்கு என் நண்பனும் முக்கியம்தான்.. செம செயல் செய்த வெங்கட் பிரபு

சென்னை: Thalapathy 68 Venkat Prabhu (தளபதி 68 வெங்கட் பிரபு) தளபதி 68 பூஜையின்போது பிக்பாஸ் யுகேந்திரனுக்காக வெங்கட் பிரபு செய்த செயல் பாராட்டை பெற்றிருக்கிறது.

Venkat Prabhu Doing one thing for Bigg Boss Yugendran during the Thalapathy 68 Pooja

லியோ படத்தில் நடித்து முடித்து கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய படங்கள் வசூலை குவித்ததாக கூறப்பட்டாலும் விமர்சன ரீதியாக அடிவாங்கியிருப்பதாகவே திரைத்துறையினரால் கூறப்படுகிறது.

காப்பாற்றுமா தளபதி 68: லியோ படம் 460 கோடி ரூபாயை ஒரே வாரத்தில் வசூலித்ததாக கூறப்பட்டாலும் படத்தின் ரிசல்ட் என்னவோ விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் கொஞ்சம் அப்செட்டைத்தான் கொடுத்திருக்கிறது. எனவே தளபதி 68 படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் அவர்கள். வெங்கட் பிரபு படம் அனைவரையும் கவரும் என்பதால் தளபதி 68 காப்பாற்றும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

தளபதி 68 பூஜை: லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு தளபதி 68 பூஜை போடப்பட்டது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்ட பூஜையில் விஜய், வெங்கட் பிரபு, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, கங்கை அமரன், மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதுதொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது.

பாடல் ஷூட்டிங்: பூஜையை முடித்துவிட்டு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகவும் அதனை ராஜுசுந்தரம் கோரியோகிராஃபி செய்ய விஜய், பிரசாந்த் உள்ளிட்டோர் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது. அடுத்தக்கட்ட ஷெட்யூலுக்காக வெளிநாட்டுக்கு படக்குழு பறக்கவிருப்பதாகவும் தெரிகிறது. இப்படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு செய்த செயல்: இந்நிலையில் தளபதி 68 பூஜையின்போது வெங்கட் பிரபு செய்த செயல் பாராட்டை பெற்றிருக்கிறது. அதாவது மலேசியா வாசுதேவனின் மகனும், பாடகரும், வெங்கட் பிரபுவின் நெருங்கிய நண்பருமான யுகேந்திரன் இப்போது பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்துகொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு நடந்த லைக், டிஸ்லைக் டாஸ்க் பிக்பாஸ் போட்டியில் நடத்தப்பட்டது.

Venkat Prabhu Doing one thing for Bigg Boss Yugendran during the Thalapathy 68 Pooja

அந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினரோ இல்லை நண்பர்களோ வீடியோ பேசி அனுப்புவார்கள். அதில் யுகேந்திரனுக்காக எஸ்பிபி சரணும், வெங்கட் பிரபுவும் வீடியோவை பேசி அனுப்பியிருந்தார்கள். அதில் ஹைலைட் என்னவென்றால் தளபதி 68 பூஜைக்கு வெங்கட் பிரபு என்ன காஸ்ட்யூம் அணிந்து எந்த கெட்டப்பில் இருந்தாரோ அதே கெட்டப்போடு வீடியோவையும் பேசியிருக்கிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய பூஜையாக இருந்தாலும் வெங்கட் பிரபு தனது நண்பரை விட்டுக்கொடுக்காமல் வீடியோ அனுப்பியிருக்கிறாரே. அவர் உண்மையில் நட்புக்கு அடையாளம்தான் என பாராட்டிவருகின்றனர். அந்த வீடியோவில் பேசிய வெங்கட் பிரபு, "யுகேந்திரன் ரொம்பவே சென்சிட்டிவ்வான ஆள். அவனுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் நிறைவடைந்துவிட்டதால் இப்போது கோபத்தை எல்லாம் மறந்துவிட்டான். ரொம்ப பக்குவமான ஆளும்கூட. கண்டிப்பாக இந்த சீசனில் அவன் டஃப் போட்டியாளராக இருப்பான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X