Venkat Prabhu: விஜய் ஓக்கே சொன்னதும் ரூட்டு மாறிய வெங்கட் பிரபு... பரிதாபத்தில் மாஸ் ஹீரோஸ்
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே தளபதி 68 அப்டேட்டை வெளியிட்டார் விஜய்.
அதன்படி, இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
திடீரென உருவான இந்தக் கூட்டணியால் வெங்கட் பிரபுவை நம்பியிருந்த இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

வெங்கட் பிரபுவை நம்பிய 2 ஹீரோக்கள்:விஜய்யின் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் அவரது தளபதி 68 அப்டேட்டும் அபிஸியலாக வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28, மங்காத்தா, மாநாடு ஆகிய படங்கள் மட்டுமே பாசிட்டிவான விமர்சனங்களுடன் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. கடைசியாக அவரது இயக்கத்தில் ரிலீஸான மன்மத லீலை, கஸ்டடி ஆகிய படங்கள் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இப்படியொரு சூழலில் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பது ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது.
இந்த அதிர்ச்சியை விட வெங்கட் பிரபுவை நம்பியிருந்த 2 மாஸ் ஹீரோக்கள் தற்போது டீலில் விடப்பட்டுள்ளது இன்னும் ஷாக்கிங்காக அமைந்துள்ளது. கஸ்டடி படத்தை இயக்கிக் கொண்டிருந்த நேரத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்பை அடிக்கடி சந்தித்து வந்தார் வெங்கட் பிரபு. இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாகவும், அதனை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து சிவகார்த்திகேயனும் வெங்கட் பிரபுவும் பொது நிகழ்ச்சிகளிலும் டிவிட்டரிலும் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், விஜய் திடீரென ஓக்கே சொன்னதால் கிச்சா சுதீப், சிவகார்த்திகேயன் இருவரையுமே வெங்கட் பிரபு டீலில் விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால், சிவகார்த்திகேயன், கிச்சா சுதீப் இருவருமே ஏமாற்றத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடமும் வெங்கட் பிரபு அவரது நிலையை எடுத்துக்கூறியுள்ளாராம். தளபதி 68 படத்தை முடித்துவிட்டு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு படம் இயக்கித் தருவதாக வெங்கட் பிரபு வாக்கு கொடுத்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











