ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... இரண்டு மாஸ் படங்களின் ஹாட் அப்டேட் தந்த வெங்கட் பிரபு

சென்னை : இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அஜித் நடிக்கும் வலிமை. அதைத் தொடர்ந்து அதிகமானவர்கள் எதிர்பார்க்கும் படம் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு.

இதில் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. பல காரணங்களால் தள்ளி போய் கொண்டிருந்த வலிமை படத்தின் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. படத்தின் 90 சதவீதம் வேலைகள் முடிந்து விட்டதாகவும், இன்னும் வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய சண்டைக்காட்சிகள் மட்டுமே மீதமுள்ளதாகவும் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார்.

அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

வலிமை படம் துவங்கப்பட்டது முதல் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள், விஐபி.,க்கள், விளையாட்டு மைதானம், கோயில் பூசாரி வரை வலிமை அப்டேட் படத்தை வேல்ட் ஃபேமஸ் ஆக்கி விட்டனர். ரசிகர்கள் விடாமல் அப்டேட் கேட்டாலும் தொடர்ந்து அமைதி காத்து வந்த வலிமை படக்குழு, கடந்த மாதம் ஒரு வழியாக படத்தின் ஃபஸ்ட்லுக்கை வெளியிட்டனர்.

 சாதனை படைத்த வலிமை

சாதனை படைத்த வலிமை

ஃபஸ்ட்லுக்குடன் வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டரை அஜித் ரசிகர்கள் தாறுமாறாக வைரலாக்கி, கொண்டாடி தீர்த்தனர். குறுகிய காலத்தில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட ஃபஸ்ட்லுக் என்ற சாதனையை படைத்தது வலிமை. இந்த சாதனையை அஜித் ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள், படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் வீடியோவை வெளியிட்டு அசத்தினர்.

நாங்க வேற மாரி

நாங்க வேற மாரி

நாங்க வேற மாரி என துவங்கும் இந்த பாடல் படத்தின் மீதான மாஸை மேலும் அதிகரித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ரஷ்யாவிற்கு சென்று ஐந்தே நாட்களில் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகள் எடுத்து முடித்து, அதோடு வலிமை படத்தின் மொத்த வேலைகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளார் டைரக்டர் வினோத். இதனால் அடுத்து ரிலீஸ் தேதி, டீசர், டிரைலர் எப்போது வரும் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

வேலைகளை முடித்த யுவன்

வேலைகளை முடித்த யுவன்

இதே போல் சிம்பு ரசிகர்களும் மாநாடு படத்தின் ஃபஸ்ட்லுக், ஃபஸ்ட் டிராக் பாடல்களை கொண்டாடி வருகின்றனர். படத்தின் ரிலீஸ் தேதி எப்போது உறுதி செய்யப்படும் என காத்திருக்கிறார்கள். இந்த இரு படங்களுக்குமே யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைத்துள்ளார். இரண்டு படத்திற்கும் இசை அமைக்கும் வேலைகளை முடித்து விட்டதாக யுவன் ஏற்கனவே கூறி விட்டார்.

வெங்கட் பிரபுவிடம் அப்டேட் கேட்ட ரசிகர்

வெங்கட் பிரபுவிடம் அப்டேட் கேட்ட ரசிகர்

என்ன தான் ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், ஃபஸ்ட் சிங்கிள் என அடுத்தடுத்து வெளியிட்டாலும் இன்னமும் வலிமை அப்டேட் கேட்பதை அஜித் ரசிகர்கள் நிறுத்திய பாடியல்லை. சமீபத்தில் சிக்னலில் காத்திருந்த டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் அஜித் ரசிகர் ஒருவர், வலிமை அப்டேட் கேட்டுள்ளார்.

2 அப்டேட் தந்த வெங்கட் பிரபு

2 அப்டேட் தந்த வெங்கட் பிரபு

அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, வலிமை இரண்டாவது சிங்கிள் பாடல் வேலைகளை யுவன் முடித்து விட்டார். விரைவில் வர உள்ளது. என்ஜாய் பண்ணுங்க. மாநாடு படத்தின் இரண்டாவது சிங்கிளும் விரைவில் வெளியாக உள்ளது என ஒரு கேள்விக்கு இரண்டு படங்களின் அப்டேட் கொடுத்தார் வெங்கட் பிரபு.

மீண்டும் டிரெண்டிங் ஆன வலிமை

மீண்டும் டிரெண்டிங் ஆன வலிமை

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். லைக்குகள் குவிந்து வருகிறது. இதனால் வலிமை ஹேஷ்டாக் மீண்டும் டிரெண்டிங் ஆகி உள்ளது. இதன் மூலம் இரண்டு படங்களின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி விரைவில் வெளியிடப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X