Thalapathy 68 - தளபதி 68 எப்படிப்பட்ட படமாக இருக்கும்?.. வெங்கட் பிரபு கொடுத்த ஹிண்ட்
சென்னை: Thalapathy 68 (தளபதி 68) சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெங்கட் பிரபு பேசியதை தொடர்ந்து விஜய்யை வைத்து அவர் இயக்கப்போகும் படம் இப்படித்தான் இருக்கும் என ரசிகர்கள் யூகித்துவருகின்றனர்.
பீஸ்ட், வாரிசு படங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவருகிறார். லியோ என பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடந்துவருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி படம் உலகம் முழுக்க வெளியாகிறது.

எப்போது முடிகிறது ஷூட்டிங்: ரிலீஸ் தேதியை முன்னரே அறிவித்துவிட்டதால் அந்த தேதியில் ரிலீஸ் செய்ய லோகேஷ் கனகராஜ் கடுமையாக வேலை செய்துவருகிறார். இப்போது நடந்துவரும் ஷூட்டிங் தமிழ்நாட்டிலேயே ஜூன் 15ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறதாம். அன்றோடு ஷூட்டிங்கை போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கவிருக்கின்றன. ஜூலை மாதத்தில் விஜய் லியோ படத்துக்காக டப்பிங் கொடுக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.
தளபதி 68: லியோ படம் எப்படி உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறதோ அதேபோல் விஜய்யின் அடுத்த படமும் அதே எதிர்பார்ப்பில் இருக்கிறது. அட்லீதான் படத்தை இயக்குவார் என முதலில் சொல்லப்பட்டது. அடுத்ததாக தெலுங்கு இயக்குநர்கள் சிலரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் அதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஹேப்பி மூடை இழந்தனர். அதனைத் தொடர்ந்து இப்போது வெங்கட் பிரபு இயக்கப்போகிறார் என தகவல் வெளியானது.
விஜய்க்கு ஒரு மெகா ஹிட் பார்சல்: வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைய வேண்டும் என மங்காத்தா படத்தின் வெற்றிக்கு அடுத்ததாகவே தளபதி ரசிகர்கள் கூறிவந்தனர். அப்படி இணையும்பட்சத்தில் நிச்சயம் அஜித்துக்கு எப்படி மங்காத்தா மெகா ஹிட்டானதோ அதேபோல் விஜய்க்கும் ஒரு மெகா ஹிட் கிடைக்கும் என கூறினர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இந்தச் சூழலில் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ சமீபத்தில் வெளியானது. அதன்படி படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு 68ஆவது படமாகவும், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு 25ஆவது படமாகவும் இது அமைகிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்துக்கு பிறகு பல வருடங்கள் கழித்து விஜய் படத்துக்கு யுவன் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபு பதில்: இதனையடுத்து விஜய்யை வைத்து வெங்கட் பிரபு எந்த மாதிரியான படத்தை இயக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, "நான் சீரியஸ் படம் எடுத்தா ஓட மாட்டிங்குது. என்டர்டெயின்மென்ட்டா எடுத்தா தான் மக்கள் பாக்குறாங்க. நான் இப்படி தான் படம் எடுப்பேன்னு மக்கள் முடிவு செஞ்சுட்டாங்க. அதனால் இனி என்டர்டெயின்மென்ட் கொண்ட படங்களைதான் எடுப்பேன்" என கூறினார். வெங்கட் பிரபுவின் பேச்சை பார்த்த ரசிகர்கள் விஜய்யை வைத்து வெங்கட் பிரபு படு ரகளையான ஜாலியான படத்தைத்தான் எடுக்கப்போகிறார் என தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











