பொறுமை கடலினும் பெரிது.. ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு.. ‘கோட்’ அப்படி இருக்குமாம்!

சென்னை: நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்கிற அறிவிப்பை நடிகர் விஜய் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பை ஷேர் செய்த வெங்கட் பிரபு தொடர்ந்து சோசியல் மீடியாவில் தன்னை திட்டி வரும் ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மங்காத்தா படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து படம் இயக்க நினைத்த வெங்கட் பிரபு பல வருட காத்திருப்புக்கு பிறகு மாநாடு படத்தின் வெற்றியுடன் தளபதி படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

Vijay GOAT Venkat Prabhu Yuvan Shankar Raja Sneha

டீ ஏஜிங், சிஜி, அப்பா, மகன் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், விஜயகாந்த் ஏஐ கேமியோ, சிவகார்த்திகேயன் கேமியோ என 'கோட்' படமே ரசிகர்களுக்கான கொண்டாட்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெங்கட் பிரபு அதை உறுதிப்படுத்தும் விதமாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

இருக்கா? இல்லையா?: நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். ஆனால், கோட் படத்தின் அப்டேட் மற்றும் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என்கிற அறிவிப்பையும் விஜய் வெளியிட்டுள்ளார். இதைவிட பிறந்தநாள் கொண்டாட்டம் ரசிகர்களுக்கு வேறு என்ன இருக்கப் போகிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கோட் செகண்ட் சிங்கிள்: புதிய கீதை படத்தை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து யுவன் சங்கர் ராஜா விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார். கோட் படத்தின் முதல் சிங்கிளான "விசில் போடு" பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இரண்டாவது சிங்களம் விஜய் பாடியுள்ளார். "சின்ன சின்ன கண்கள்" எனும் குடும்பப் பாடலாக இந்த பாடல் உருவாகியுள்ளது. அப்பா விஜய், சினேகா மற்றும் மகன் விஜய் இருக்கும் பாடலாக இது வெளியாகும் என்பது போஸ்டரை பார்த்தால் தெரிகிறது.

ஹேட்டர்களுக்கு பதிலடி: 'கோட்' படத்தின் அப்டேட் உரிய நேரத்தில் வரவில்லை என வெங்கட் பிரபுவை கெட்ட கெட்ட வார்த்தைகளில் சில ஹேட்டர்கள் திட்டி வந்த நிலையில், அவர்களுக்கு தரமான பதிலடி கொடுக்கும் விதமாக, "பொறுமை கடலினும் பெரிது" என்றும் நண்பர்கள் மற்றும் ஹேட்டவர்களுக்கு தளபதி 50வது பிறந்தநாள் கொண்டாட்டம் மறக்க முடியாத ஒன்றாக அமையும் என பதிவிட்டுள்ளார்.

அடுத்த அன்பெனும் ஆயுதம்: லியோ படத்திலும் இதே போல குடும்ப பாடலாக அன்பெனும் ஆயுதம் பாடல் இடம்பெற்றது. இந்நிலையில், அந்த பாடலை தூக்கி சாப்பிடும் அளவுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருப்பாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் குரலை இந்த பாடலில் யுவன் சங்கர் ராஜா பயன்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு இந்த பாடல் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X