சபாஷ் சரியான போட்டி.. அஜித் பட அப்டேட்டுக்கு வெங்கட் பிரபு சவால்.. கோட் அப்டேட் எப்போ தெரியுமா?

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிரடியாக அஜித் குமாரின் ஏகே63 அப்டேட் தாறுமாறாக நேற்று வெளியானது. படத்திற்கு கிளின்ட் ஈஸ்ட்வுட் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' என செம டெரரான டைட்டிலை ஆதிக் ரவிச்சந்திரன் வைத்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள அந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். மேலும், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என்கிற பக்கா பிளான் உடன் அறிவிப்பை ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டு இருப்பது அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

Venkat Prabhu gives tough GOAT update competition to Ajith Kumar s Good Bad Ugly

அடுத்த ஆண்டு ஆரம்பமே அதிரும்: இந்த ஆண்டு தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் பொங்கல் ரிலீஸை எந்தளவுக்கு சொதப்ப முடியுமோ அந்த அளவுக்கு சொதப்பி விட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஆரம்பமே சரவெடி தான் என்பது போல அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' ரிலீஸ் ஆக போகிறது.

தீபாவளிக்கு விடாமுயற்சி: பொங்கலுக்கு 'குட் பேட் அக்லி' வெளியானால் அதற்கு முன்னதாகவே இந்த ஆண்டு தீபாவளிக்குள் விடாமுயற்சி ரிலீஸ் ஆகிவிடும் என அஜித் ரசிகர்கள் டபுள் சந்தோஷத்தில் உள்ளனர். நடிகர் அஜித் மீண்டும் ஆக்டிவாகி விட்ட நிலையில், கூடிய விரைவிலேயே விடாமுயற்சி படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புக்கு சென்று முடித்து விட்டு 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரியான போட்டி: அஜித் படத்தின் அப்டேட் வந்த அடுத்த நிமிடமே விஜய் படத்தின் அப்டேட் வந்தால் தானே போட்டி பலமாக இருக்கும். உடனடியாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் கோட் அப்டேட் வெரி சூன் என ஒரு ட்வீட்டை போட்டு விஜய் ரசிகர்களையும் ஹேப்பி ஆக்கி விட்டார்.

ஃபர்ஸ்ட் சிங்கிள் வருது: கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் குரலில் உருவாகி உள்ள நிலையில், கூடிய விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பல போஸ்டர்கள் விட்ட நிலையில், இனிமேல் போஸ்டர் விட்டால் எல்லாம் ரசிகர்கள் அப்டேட்டாக ஏற்க மாட்டார்கள் என வெங்கட் பிரபுவே சொன்ன நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிளை இறக்கி யூடியூப் ரெக்கார்டுகளை சுக்கு நூறாக்க முடிவு செய்து விட்டனர் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X