Venkat Prabhu: பவதாரிணி மறைவு... சோகத்தில் மூழ்கிய வெங்கட் பிரபு... GOAT படப்பிடிப்புக்கு பிரேக்..?

சென்னை: பின்னணிப் பாடகி பவதாரிணி கடந்த வாரம் கேன்சர் பாதிப்பால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இளையராஜாவின் சொந்த ஊரான தேனி அருகே நடைபெற்றது. இந்நிலையில், பவதாரிணியின் சகோதரரும் இயக்குநருமான வெங்கட் பிரபு இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சோகத்தில் மூழ்கிய வெங்கட் பிரபு
இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி கடந்த வாரம் இலங்கையில் உயிரிழந்தார். கேன்சர் பாதிப்பு காரணமாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்த பவதாரிணியின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து இலங்கையில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடல், இளையராஜாவின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 Venkat Prabhu: GOAT director Venkat Prabhu shared the last photo with Bhavadharini

பவதாரிணியின் இறுதி நிகழ்வில் அவருக்கு தேசிய விருது வென்று கொடுத்த 'மயில் போல பொண்ணு' பாடலை இளையராஜாவின் குடும்பத்தினர் பாடி அஞ்சலி செலுத்தினர். இளையராஜா, யுவன், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கண்ணீர் மல்க பவதாரிணிக்கு விடை கொடுத்தனர். முன்னதாக சென்னையில் வைக்கப்பட்டிருந்த பவதாரிணியின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

 Venkat Prabhu: GOAT director Venkat Prabhu shared the last photo with Bhavadharini

இந்நிலையில், வெங்கட் பிரபு தற்போது தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது. கடைசியாக பவதாரிணியுடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட போட்டோவான இது ரசிகர்களை உருக வைத்துள்ளது. பவதாரிணியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவரது நெத்தியில் முத்தமிடுகிறார் வெங்கட் பிரபு. மேலும் நாம் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் எனவும் இதயம் நொறுங்கும் எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் பிரபுவின் படங்களில் பாடல்கள் பாடியுள்ள பவதாரிணி, மங்காத்தா படத்தின் பின்னணி இசையமைப்பு பணிகளிலும் வேலை பார்த்துள்ளார். முக்கியமாக கோவா படத்தில் கார்த்திக் ராஜா, யுவன், பவதாரிணி, பிரேம்ஜி, வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து பாடிய 'ஏழேழு தலைமுறைக்கும்' பாடல், இளையராஜாவின் ஃபேமிலி பாடலாக உருவானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பவதாரிணியின் மறைவால் சோகத்தில் இருக்கும் வெங்கட் பிரபு, இன்னும் GOAT படப்பிடிப்புக்கு செல்லவில்லை எனத் தெரிகிறது. விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் தயாரிக்கும் தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசையமைக்கிறார். பவதாரிணியின் மறைவால் யுவனும் வெங்கட் பிரபுவும் சோகத்தில் உள்ளதால், GOAT படப்பிடிப்புக்கு தற்போது பிரேக் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விரைவில் GOAT ஷூட்டிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X