விஜய் நடித்த GOAT படத்துக்காக வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு ரிலீஸாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக பட தயாரிப்பு நிறுவனத்துக்கு கொள்ளை லாபம் என்றே சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் GOAT படத்துக்காக வெங்கட் பிரபு வாங்கியதாக ஒரு சம்பள தொகை சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கம் என்றாலே அந்தப் படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருப்பார்கள். இதுவரை அவர் இயக்கிய படங்களில் ஒருசில படங்களே தோல்வியடைந்திருக்கின்றன. முக்கியமாக தான் இயக்கும் படங்களில் பக்காவான ட்விஸ்ட், ஜாலியான சீன்கள் என முழு கமர்ஷியல் பேக்கேஜை வைத்துவிடுவார். ஆனால் அவர் இயக்கிய கஸ்டடி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதேசமயம் அதற்கு முன்னதாக அவர் இயக்கிய மாநாடு படம் 100 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

goat vijay venkat prabhu

GOAT வெங்கட் பிரபு: கஸ்டடி தோல்விக்கு பிறகு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கியிருந்தார் வெங்கட். ஏஜிஎஸ் பேனரில் அர்ச்சனா கல்பாத்தி பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் மல்டி ஸ்டாரர் படமாக இது உருவாகியிருந்தது. கண்டிப்பாக இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுத்து தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வெங்கட் பிரபு உழைத்திருந்தார். கண்டிப்பாக கஸ்டடி சந்தித்த விமர்சனத்துக்கு இதில் மருந்திட்டு கொள்ளலாம் என்று நினைத்திருந்தார் வெங்கட்.

சுமாரான வரவேற்பு: செப்டம்பர் ஐந்தாம் தேதி படமானது ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள். முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்தை ஏகத்துக்கும் கொண்டாடினார்கள். அதேசமயம் அடுத்தடுத்த நாட்களில் படம் பார்த்த பொதுவான ரசிகர்கள் படத்தில் ஏகப்பட்ட குறைகளை கூறி தங்களது சுமாரான வரவேற்பையே கொடுத்தனர். இதன் காரணமாக படக்குழு கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

வசூல் ரீதியாக ஹிட்?: விமர்சன ரீதியாக படம் பலத்த அடியை வாங்கியிருக்கிறது. முக்கியமாக வெங்கட் பிரபு சொதப்பிவிட்டார்; அரத பழசான கதையை பட்டி டிங்கரிங் செய்து கொடுத்திருக்கிறார் என்ற பேச்சுக்கள் ஓபனாகவே கேட்க ஆரம்பித்தன. அதேசமயம் வசூல் ரீதியாக படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறிவருகிறது. இதுவரை 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருப்பதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தொடர்ந்து கூறிவருகின்றன.

வெங்கட் பிரபு சம்பளம்: இந்நிலையில் GOAT படத்துக்காக வெங்கட் பிரபு வாங்கியிருப்பதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது. அதன்படி அவர் இப்படத்துக்காக பத்து கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இருந்தாலும் விமர்சன ரீதியாக படம் அப்படி இப்படி பேச்சுக்களை சந்தித்திருப்பதால் அவர் கொஞ்சம் மூட் அவுட்டில் இருப்பதாகவும் திரைத்துறையினர் சொல்கிறார்கள். வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X