ஹேப்பி மங்காத்தா டே.. தளபதி 68 இயக்குநர் போட்ட தரமான ட்வீட்.. விடாமுயற்சி அப்டேட் வருமா?
சென்னை: 12 வருடங்களாக அஜித்தின் மங்காத்தா திரைப்படம் அஜித் ரசிகர்களின் மனங்களை விட்டுப் பிரியாமல் இன்னமும் அதே வெறித்தனத்துடன் டிரெண்டிங்கில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.
நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு செய்த தரமான சம்பவம் என்றால் அது மங்காத்தா படம் தான். பில்லா படத்துக்கு பிறகு அஜித்துக்கு மிகப்பெரிய மாஸ் படத்தை வெங்கட் பிரபு கொடுத்திருந்தார்.

அடுத்த தளபதி 68 படத்தின் மூலம் விஜய்க்கும் ஒரு மெகா இண்டஸ்ட்ரி ஹிட்டை கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஹேப்பி மங்காத்தா டே: 2011ம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான அஜித்தின் மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை படைத்தது மட்டுமின்றி இன்றளவும் அஜித் ரசிகர்களின் நம்பர் ஒன் ஃபேவரைட் படமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதனை கொண்டாடும் வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு ஹேப்பி மங்காத்தா டே என ட்விட்டரில் பதிவிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
டிரெண்டிங்கை தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்: மங்காத்தா படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், #12YrsOfKWFameMANKATHA ஹாஷ்டேக்கை உருவாக்கி நேற்று இரவில் இருந்தே டிரெண்டிங்கில் அஜித் ரசிகர்கள் தனி அரசாங்கமே நடத்தி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் லியோ ரிலீஸாக இன்னும் 50 நாட்கள் உள்ளன என தனி டிரெண்டிங்கை செய்து வரும் நிலையில், இரண்டு ஹாஷ்டேக்குகளும் கடும் போட்டியை சந்தித்து வருகின்றன. லியோ படத்தின் 'நா ரெடி" தான் பாடலை வைத்தே மங்காத்தா எடிட் செய்து இருப்பதெல்லாம் கொல மாஸ்..

மங்காத்தா 2 எப்போ: வெங்கட் பிரபு தற்போது தளபதி 68 படத்தை இயக்கும் பணிகளில் தயாராகி வரும் நிலையில், மங்காத்தா டே என ட்வீட் போட்ட அவரிடம் ரசிகர்கள் வைக்கும் முதல் கோரிக்கையே மங்காத்தா 2 எப்போ? என்பது தான். அஜித்தும் விஜய்யும் மங்காத்தா 2 படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
விடாமுயற்சி அப்டேட் வருமா: அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக மங்காத்தா 12 ஆண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம் எப்போ ஆகும் என்கிற அப்டேட்டாவது வருமா என்றும் வெங்கட் பிரபுவிடம் எல்லாம் விடாமுயற்சி அப்டேட்டை நீங்களாவது கேட்டு சொல்லுங்க சார் என அஜித் ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











