Venkat Prabhu on Vijay - பிரேம்ஜியை நடிக்கக்கூடாது என்று சொன்னாரா விஜய்?.. வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்

சென்னை: Venkat Prabhu (வெங்கட் பிரபு) பிரேம்ஜியை தன்னுடைய படத்தில் நடிக்கக்கூடாது என்று விஜய் சொன்னது குறித்து வெங்கட் பிரபு விளக்கமளித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதிலும் துணிவு படத்துக்கு போட்டியாக களமிறங்கி வாரிசு சூடு வாங்கிக்கொண்டது விஜய் ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. எனவே லியோ படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கின்றனர்.

Venkat Prabhu has explained about Vijay saying that Premji should not be cast in his film

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். படத்தில் சஞ்சய் தத் மெயின் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், விஜய் ஆகியோர் ஒரே கேங்ஸ்டர் குடும்பத்தினர் என்றும் அவர்களுக்குள் நடக்கும் பிரச்னைகளும் பிறகு நடக்கும் சம்பவங்களும்தான் கதை என்றும் கூறப்படுகிறது.

தளபதி 68: இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார். அதன்படி படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்துக்கு எப்படி ஒரு மங்காத்தா படத்தை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இந்தப் படத்தின் மூலம் ஹிட் கொடுக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் விரும்புகின்றனர்.

அமெரிக்காவிலிருந்து ரிட்டர்ன் ஆன விஜய்: இந்தச் சூழலில் படத்துக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி வெங்கட் பிரபுவும், விஜய்யும் சமீபத்தில் அமெரிக்கா சென்றனர். அங்கு விஜய்யின் முழு உடம்பும் 3டியில் ஸ்கேன் செய்யப்பட்டது. எனவே சைன்ஸ் பிக்‌ஷன் படமாக இது இருக்குமோ என சந்தேகம் எழுந்திருக்கிறது. மேலும் விஜய் இரட்டை வேடம் என்றும் அதில் ஒரு விஜய்க்கு சினேகா ஹீரோயின் என்றும் கூறப்படுகிறது. இன்று விஜய் சென்னை திரும்பியிருக்கிறார். எனவே லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேம்ஜிக்கு நோ: சூழல் இப்படி இருக்க வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் கொடுத்த பழைய பேட்டி ஒன்று நேற்று ட்ரெண்டானது. அதில் பிரேம்ஜியிடம் விஜய், 'நீ அஜித் ஆளுனு தெரியும். எனவே நானும் உங்கள் அண்ணனும் சேர்ந்து படம் பண்ணும்போது நீ நடிக்கக்கூடாது'என சொன்னதாக வெங்கட் பிரபு தெரிவித்தார். இதனையடுத்து தளபடி 68ல் பிரேம்ஜியை நடிக்கக்கூடாது என விஜய் சொல்லிவிட்டதாக சிலர் தகவல் பரப்பினர்.

விளக்கம்: இந்நிலையில் இதுகுறித்து வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில், "இந்த சம்பவம் மங்காத்தாவுக்கு பிறகு நடந்தது. அதுவும் அவர் ஜோக்குக்காக அப்படி சொன்னார். இப்படி எதையும் பரப்பாதீர்கள். அன்பை மட்டும் பரப்புவோம். வெறுப்பை அல்ல" என பதிவு செய்திருக்கிறார். இதனால் இந்த விவகாரத்துக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X