விஜய்க்காக வித்தியாசமான கதையை உருவாக்குவேன்.. மனம் திறந்த வெங்கட்பிரபு !

சென்னை : விஜய்க்காக வித்தியாசமான கதையை விரைவில் உருவாக்குவேன் என்று இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் என பலத் திறமைகளைக் கொண்டவர் வெங்கட்பிரபு

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனா இவர், சென்னை 600028 திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார். இதையடுத்து, சரோஜா, கோவா, மங்கத்தா, பிரியாணி, மாஸ் மசிலாமணி, , ஆகிய படங்களை இயக்கினார்.

மாநாடு

மாநாடு

மாநாடு திரைப்படத்தின் வெற்றியால் வெங்கட்பிரபு தற்போது திரையுலகில் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார். சிம்பு, எஸ் ஜே சூர்யா,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். எத்தனையோக டைம் டிராவல் திரைப்படங்களை பார்த்து பழகி நமக்கு, வித்தியாசமான டைம் லூப் முறையில் மாநாடு திரைப்படத்தை கொடுத்து இருந்தார்.

மகத்தான வெற்றி

மகத்தான வெற்றி

மாநாடு திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 117 கொடி ரூபாய் வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. நடிகர் சிம்புக்கும் கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக இப்படம் அமைந்தது. இந்த படத்தை அடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியது.

விஜய் தான் ஞாபகம் வருவார்

விஜய் தான் ஞாபகம் வருவார்

இந்நிலையில், இயக்குநர் வெங்கட்பிரபு சமீபத்தில் பேட்டியளித்த பேட்டியில், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என கூறியுள்ளார். ஹாலிவுட்டில் வில் ஸ்மித் படங்களை பார்க்கும்போது எனக்கு விஜய் தான் ஞாபகம் வருவார் என்றும் வில் ஸ்மித் ஸ்டைலில் ஒரு படத்தை இயக்கி அதில் விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்றும் அவர் கூறினார்.

வித்தியாசமான கதை

வித்தியாசமான கதை

நடிகர் விஜய்யின் ஸ்டார் அந்தஸ்து தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டது. எனவே அவருக்காக ஒரு வித்தியாசமான கதையை விரைவில் உருவாக்கும் திட்டமிருக்கிறது என்றும் கூறிய வெங்கட்பிரபு, ஆனால் இதற்கு விஜய் ஒப்புக் கொள்வாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அந்த பேட்டியில் மனம திறந்து பேசியுள்ளார்.

Recommended Video

Manmatha leelai | Samyuktha Hegde | Riya Suman | ரொம்ப Enjoy பண்ணி நடிச்சோம் | Filmibeat Tamil
கூட்டணி நல்லத்தான் இருக்கும்

கூட்டணி நல்லத்தான் இருக்கும்

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இணைந்தால் நன்றாக தான் இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், விஜய் தற்போது தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கப்படவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X