Thalapathy 68 - நீ அஜித் ஆளு.. என் படத்துல நடிக்காத.. தளபதி 68ல் பிரேம்ஜிக்கு கண்டிஷன் போட்டாரா விஜய்?
சென்னை: Thalapathy 68 Update (தளபதி 68 அப்டேட்) நீ அஜித் ஆள் என்பதால் என்னுடன் நடிக்காதே என்று விஜய் பிரேம்ஜியிடம் கூறியதாக வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.
பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசு படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதால் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

அக்டோபர் ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். விரைவில் லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கும் என கூறப்ப்படுகிறது.
தளபதி 68: இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார். அதன்படி படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்துக்கு எப்படி ஒரு மங்காத்தா படத்தை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இந்தப் படத்தின் மூலம் ஹிட் கொடுக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் விரும்புகின்றனர்.
அமெரிக்காவில் விஜய்: இந்தச் சூழலில் படத்துக்கான பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி அமெரிக்காவுக்கு விஜய்யும், வெங்கட் பிரபுவும் சென்றிருக்கின்றனர். அங்கு 3டியில் விஜய்யின் முழு உடம்பையும் ஸ்கேன் செய்யும் புகைப்படம் வெளியாகி ட்ரெண்டானது.மேலும் எதிர்காலத்திற்கு வருக என வெங்கட் பிரபு ட்வீட் செய்திருந்தார். அதனையடுத்து இந்தப் படம் டைம் ட்ராவலை மையப்படுத்தி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்தது.
சினேகா?: இதற்கிடையே இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவிருக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு ஜோதிகா நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தில் மொத்தம் இரண்டு விஜய் என சொல்லப்படுகிறது. அதில் வயதான விஜய்க்குத் ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் கேட்டதாகவும் அதனால்தான் அவர் நோ சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சினேகா அந்த கேரக்டரில் நடிக்கலாம் என லேட்டஸ்ட் தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரேம்ஜிக்கு நோ: இந்நிலையில் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் கொடுத்த பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய வெங்கட் பிரபு,"ஒரு முறை நான், விஜய், பிரேம்ஜி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது விஜய் பிரேம்ஜியிடம் நீ தலயோட (அஜித்) ஆளுனு எனக்கு நல்லாவே தெரியும். அதனால் நானும், உன் அண்ணனும் சேர்ந்து படம் பண்ணும்போது அதில் நடிக்காதே என்று சொல்லிவிட்டார். அதற்கு பிரேம்ஜியோ அண்ணா அண்ணா ஏற்கனவே உங்க ரசிகர்கள் எல்லாம் ஒரு மாதிரி சொல்லிட்டு இருக்காங்க. இப்போ நீங்களும் நடிக்கக்கூடாதுனு சொல்றீங்களே என கெஞ்சிக்கொண்டிருந்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











