twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏகே 62 இயக்குநர் லிஸ்டில் வெங்கட் பிரபு..? பைனல் பண்ண முடியாமல் திணறும் அஜித்..?

    |

    சென்னை: துணிவை தொடர்ந்து அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைகா சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

    ஆனால், விக்னேஷ் சிவன் சொன்ன கதை, திரைக்கதையில் அஜித்துக்கும் லைகா புரொடக்‌ஷனுக்கு திருப்தி இல்லை என சொல்லப்படுகிறது.

    இதனால் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை லைகா நிறுவனம் நீக்கிவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், அஜித்துடன் இணையும் இயக்குநர் யார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    அதன்படி, மகிழ் திருமேனி அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கலாம் என தகவல் வெளியான நிலையில் தற்போது வெங்கட் பிரபுவின் பெயரும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது.

    AK 62வில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட வேதனை.. அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன்! AK 62வில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட வேதனை.. அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன்!

     மனம் தளர்ந்த விக்னேஷ் சிவன்

    மனம் தளர்ந்த விக்னேஷ் சிவன்

    நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் நெகட்டிவான விமர்சனங்களை சந்தித்த அஜித், துணிவு படத்தில் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், திடீரென ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதனை தற்போது விக்னேஷ் சிவனும் உறுதிசெய்துள்ளார். தனது டிவிட்டரில் இருந்து அஜித்தின் கவர் போட்டோவை நீக்கியுள்ள விக்னேஷ் சிவன், Never Give Up என மோட்டிவேஷன் கேப்ஷனை வைத்துள்ளார்.

     அடுத்த இயக்குநர் யார்?

    அடுத்த இயக்குநர் யார்?

    விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கு திருப்தி இல்லையென்று சொல்லப்படுகிறது. அதனால் தான் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி, அஜித்தே எதிர்பார்க்காத அட்டகாசமான கதையை கூறி அவரது குட்புக்கில் இடம் பிடித்துவிட்டாராம். இதனால் மகிழ் திருமேனி தான் ஏகே 62 இயக்குநர் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

     சீனில் வந்த வெங்கட் பிரபு?

    சீனில் வந்த வெங்கட் பிரபு?

    இதனிடையே ஏகே 62 படத்தின் இயக்குநர் லிஸ்ட்டில் வெங்கட் பிரபுவின் பெயரும் தற்போது அடிபடுகிறது. அஜித் கேரியரில் அவருக்கு மாஸ் கம்பேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது மங்காத்தா தான். சால்ட் அன்ட் பெப்பர் லுக், நெகட்டிவான ஆன்டி ஹீரோ என இறங்கி அடித்திருந்தார் அஜித். வெங்கட் பிரபுவின் மேஜிக்கல் திரைக்கதையும் மேக்கிங்கும் மங்காத்தா படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக்கியது. இதனால் ஏகே 62 படத்தின் இயக்குநர் லிஸ்ட்டில் வெங்கட் பிரபுவின் பெயரையும் லைகா பரிந்துரைத்து வருகிறதாம்.

     விரைவில் அகே 62 அபிஸியல் அப்டேட்

    விரைவில் அகே 62 அபிஸியல் அப்டேட்

    ஏகே 62 படத்துக்காக 220 கோடி ரூபாய் பட்ஜெட்டை லைகா நிறுவனம் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் அஜித்துக்கு மட்டும் ரூ.105 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதனால் ஏகே 62 படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் என்பதில் லைகா தீவிரமாக உள்ளதாம். இதனிடையே வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் ஏகே 62 படத்தில் கமிட் ஆவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. எனவே ஏகே 62 படம் குறித்த லைகாவின் அபிஸியல் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    English summary
    Ajith's Thunivu is released for Pongal. Following this, Ajith will act in a film with Vignesh Sivan's direction. But according to the current information, it is said that Vignesh Shivan has been refused from the film AK 62 by Lyca. So it is reported that Magizh Thirumeni or Venkat Prabhu is expected to direct Ajith's AK 62.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X