லோகிக்கு டாட்டா காட்டிய ரஜினி.. சூப்பர் ஸ்டாருக்கு டாட்டா காட்டிய சுந்தர். சி.. தலைவர் 173 இயக்குநர் இவரா?
சென்னை: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கப் போகும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டைரக்டர் எல்லாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என பெரிய முற்றுப்புள்ளியை ரஜினிகாந்த் வைத்தார்.
அமீர்கானை வைத்து இயக்கும் படம் கூட கூலி படத்தின் ரிசல்ட் காரணமாக லோகேஷ் கனகராஜ் கையை விட்டுப் போனதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கடந்த வாரம் சுந்தர். சி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கப் போகிறார், கமல் தயாரிக்கிறார் என்கிற சந்தோஷமான அப்டேட் வெளியானது.

ஆனால், அதற்குள் யார் கண் பட்டதோ தெரியவில்லை, தலைவர் 173 படத்தை சுந்தர். சி இயக்கப் போவதில்லை என டாட்டா காட்டிவிட்டார். இந்நிலையில், தலைவர் 173 படத்தை இந்த இயக்குநர் தான் இயக்கப் போகிறார் என இன்சைட் ரிப்போர்ட்டுகள் சில கசிந்துள்ளன.
ஆள விடுப்பா அருணாச்சலம்: சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டான அருணாச்சலம் படத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக டாப் ஹீரோக்களை வைத்தே சுந்தர். சி படங்களை இயக்காமல் இருந்து வந்த நிலையில், ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு அல்வா போல கிடைத்தும் ஆளவிடுப்பா அருணாச்சலம் என சுந்தர். சி தலைதெறிக்க ஓடும் அளவுக்கு என்ன சம்பவம் பின்னணியில் நடந்தது என்பது தான் கோலிவுட்டின் மிகப்பெரிய கேள்வியாக மாறி உள்ளது.

நெல்சனுக்கு தெரிந்த வித்தை: ஷங்கரை தொடர்ந்து ரஜினிகாந்துக்கு சரியான தீனிப்போடும் கதையை இயக்க முடியாமல் பா. ரஞ்சித், ஏ.ஆர். முருகதாஸ், சிறுத்தை சிவா உள்ளிட்ட பலர் திணறிய நிலையில் நெல்சன் அந்த குதிரையை ஜெயிக்கும் குதிரையாக மீண்டும் மாற்றுகிறேன் என ஜெயிலர் படத்தின் மூலம் நிரூபித்தார். கூலி படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜால் கூட ரஜினிகாந்துக்கான கதையை கட்டமைக்க முடியவில்லை. ஜெயிலர் 2விலும் நெல்சன் அந்த வேலையை சிறப்பாக செய்திருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் 173 இயக்குநர் இவரா?: சுந்தர். சி முன் வைத்த காலை பின் வைத்த நிலையில், தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு தலைவர் 173 படத்தை இயக்கப் போவதாக இன்சைட் ரிப்போர்ட்டுகள் கசிந்துள்ளன. ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜ் தலைவரை இயக்கினால் நல்லா இருக்கும் என்கின்றனர். கூடிய சீக்கிரமே ராஜ்கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











