குழந்தைகளின் உலகத்தை காட்டும் முயற்சி ஷாட் பூட் த்ரீ... லீட் ரோலில் வெங்கட்பிரபு -சினேகா

சென்னை : குழந்தைகளின் உலகத்தை காட்டும் முயற்சியாக எடுக்கப்பட்டு வரும் படம் ஷாட் பூட் த்ரீ.

படத்தில் வெங்கட்பிரபு, சினேகா மற்றும் யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

4 குழந்தைகளை சுற்றி எடுக்கப்பட்டுவரும் இந்தப் படத்தை அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கி தயாரித்து வருகிறார்.

ஷாட் பூட் த்ரீ படம்

ஷாட் பூட் த்ரீ படம்

குழந்தைகளின் உலகத்தை அழகாக காட்டும் முயற்சியில் எடுக்கப்படும் படங்கள் கோலிவுட்டில் மிகவும் குறைவு. அந்த வகையில் தற்போது சீதக்காதி படத்தின் இணை தயாரிப்பாளரும் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன், பெருச்சாழி படங்களின் இயக்குநருமான அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கிவரும் படம் ஷாட் பூட் த்ரீ.

வெங்கட் பிரபு, சினேகா நடிப்பு

வெங்கட் பிரபு, சினேகா நடிப்பு

இந்தப் படத்தை அவரே தயாரித்தும் வருகிறார். படத்தில் வெங்கட்பிரபு, சினேகா மற்றும் யோகிபாபு லீட் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 4 குழந்தைகளை சுற்றி இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்தும் அவர்களின் மனநிலையை மையமாக வைத்தும் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

கோடை விடுமுறை கொண்டாட்டம்

கோடை விடுமுறை கொண்டாட்டம்

மேலும் படத்தில் பூவையார், பாடகி பிரணிதி, நடனக்கலைஞர் கைலாஷ் ஹீத் மற்றும் புதுமுகம் வேதாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறை கொண்டாட்டமாக படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவரையும் கவரும் படம்

அனைவரையும் கவரும் படம்

குழந்தைகளின் உலகத்தை குழந்தைகளுக்காக குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்ற முயற்சிதான் இந்தப் படம் என்று அருணாச்சலம் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் இது அனைவரையும் கவரும்வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் சிறப்பான நடிப்பு

குழந்தைகள் சிறப்பான நடிப்பு

படத்தில் வெங்கட்பிரபு, சினேகா மற்றும் யோகிபாபு உள்ளிட்டவர்ளுடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். படத்தில் யோகிபாபு சிறப்பாக நடித்து வருவதாகவும் அதேபோல படத்தில் நடித்துவரும் குழந்தைகளும் சிறப்பாக நடித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அனைவரையும் கவரும்

அனைவரையும் கவரும்

படத்தின் கதையை ஆனந்த் ராகவுடன் இணைந்து அருணாச்சலம் எழுதியுள்ளார். மேலும் படத்தை பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படம் சென்னையை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தப் படம் குழந்தைகளை வெகுவாக கவரும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X