மங்காத்தா 2: மரணமா கலாய்த்த நெட்டிசன், நெத்தியடி கொடுத்த வெங்கட் பிரபு

By Siva

சென்னை: கதையை வச்சுக்கிட்டா வஞ்சனை செய்கிறேன் என்று தன்னை கலாய்த்தவருக்கு சூப்பராக பதில் அளித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

Venkat Prabhu knows how to handle trolls

ட்ரெய்லரில், ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க என்று அஜித் கூறியது ரசிகர்களை மிகவும் கவர்ந்துவிட்டது.

நேர்கொண்ட பார்வை பட ட்ரெய்லரின் யூடியூப் லிங்கை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு, 'ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க #thala #vinod #yuvan #Nerkondaparvai' என்று கமெண்ட் போட்டார்.

வெங்கட் பிரபுவின் கமெண்ட்டை பார்த்த அஜித் ரசிகர் ஒருவரோ, தல யுவன் வெங்கட் பிரபு கூட்டணி மீண்டும் எப்பொழுது சேரும் என்று கேட்டார். அதை பார்த்த நெட்டிசன் ஒருவர் சும்மா இல்லாமல், திரும்ப வெங்கட் பிரபு எடுத்தால் அது கண்டிப்பா பிளாப் ஆகும்னு அவருக்கே தெரியும். ஏனென்றால் வெங்கட் பிரபுவிடம் ஒழுங்கான கதை இல்லை என்றார்.

நெட்டிசன் ஒருவர் தன்னை பற்றி கிண்டல் செய்து போட்ட ட்வீட்டை பார்த்த வெங்கட் பிரபு தனக்கே உரிய ஸ்டைலில் பதில் அளித்துள்ளார். அதாவது,
வெச்சிக்கிட்டா வஞ்சனை பன்றேன் ப்ரோ!! என்னிக்கி என்கிட்ட கதை இருந்துருக்கு என்று கேட்டுள்ளார்.

வெங்கட் பிரபுவிடம் சரியான கதை இருக்காது. சும்மா அவர்கள் கோஷ்டி எங்கேயாவது போய் தண்ணி அடித்துவிட்டு ஆட்டம் போட்டதை எல்லாம் படமாக எடுப்பார் என்று விமர்சித்த நிலையில் அவர் இப்படி பதில் அளித்துள்ளார். வெங்கட் பிரபு, அஜித் கூட்டணியில் மங்காத்தா 2 படம் வர வேண்டும் என்பது தல ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை நிச்சயம் நிறைவேறும் என்று வெங்கட் பிரபு வாக்குறுதி அளிக்காவிட்டாலும் சூசகமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X