வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
சென்னை: காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி நடிப்பில் வெளிவரவுள்ள வெப் சீரிஸ் தான் 'லைவ் டெலிகாஸ்ட்'
இந்த வெப் சீரிஸை வெங்கட் பிரபு இயக்க, நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளிவரவுள்ளது.
தற்போது இந்த வெப் சீரிஸின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஹாரர் கதைக்களம்
இந்த வெப் சீரிஸின் டீசரை படக்குழு 3 மாதத்திற்கு முன்னர் வெளியிட்டது. ஹாரர் கதைகளத்தை கொண்டு வெளிவர உள்ள கதை என்பதால் ரசிகர்கள் டீசர் ரிலீஸான போதே பெரிதும் வரவேற்றனர்.

ரசிகர்கள் ஆர்வம்
இதையடுத்து லைவ் டெலிகாஸ்ட் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி & பெங்காலி என 7 மொழிகளில் வெளிவரவுள்ளதாக அறிவிப்பு வெளியானது ரசிகர்களை மேலும் ஆர்வத்தில் ஆழ்த்தியது. பேய் இருக்கும் வீட்டுக்குள் நுழையும் திரைப்படக்குழுவினர் என்ன அனுபவங்களை சந்திக்கின்றனர் என்பதைப்பற்றிய தொடர் இது

இன்னும் 2 தொடர்கள்
லைவ் டெலிகாஸ்ட்டின் இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக வெப் தொடரை இயக்கவுள்ளார். இதுமட்டுமின்றி விக்டிம், ஒரு குட்டி லவ் ஸ்டோரி என இரண்டு வெப் தொடர்களை இயக்க கமிட் ஆகியுள்ளார்.

படக்குழு அறிவிப்பு
இதைத்தொடர்ந்து தற்போது இந்த வெப் சீரிஸின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பிப்ரவரி 12 அன்று அனைத்து எப்பிஸோடுகளும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நேரடி கிலி(பயம்)பரப்பு பிப்ரவரி 12 முதல் என ஒளிபரப்பாகும் என காஜல் அகர்வால் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











