நம்பவே முடியல.. ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் திடீர் மரணம்.. துடித்துப் போன வெங்கட் பிரபு!

சென்னை: ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மாரடைப்பு காரணமாக இன்று திடீரென உயிரிழந்துள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் பிரியரான இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேன் வார்ன் மறைவு தனக்கு ரொம்பவே ஷாக்காக உள்ளது என மனமுடைந்து பதிவிட்டுள்ளார்.

ஷேன் வார்ன் காலமானார்

ஷேன் வார்ன் காலமானார்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் கேப்டனாகவும் ஒருநாள் போட்டிகளை நடத்தி அசத்திய ஷேன் வார்ன் ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராகவும் கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வந்தார். இந்நிலையில், அவர் இன்று திடீரென காலமான செய்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 52.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேவாக், ரோகித் ஷர்மா என ஏகப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். மேலும், ஷேன் வார்னை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு அதிர்ச்சி

வெங்கட் பிரபு அதிர்ச்சி

வீரேந்திர ஷேவாக் போட்ட ட்வீட்டை பார்த்து இந்த அதிர்ச்சிகரமான செய்தியை அறிந்து கொண்ட இயக்குநர் வெங்கட் பிரபு அந்த ட்வீட்டை டேக் செய்து "That's a shocker. Can't believe the legend is no more." என பேரதிர்ச்சியாக உள்ளது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை என பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

சச்சின் பற்றி ஷேன் வார்ன்

சச்சின் பற்றி ஷேன் வார்ன்

ஒரு ஓவரில் 6 பந்துகளை ஆறு விதமாக நான் போடுவேன்.. சச்சின் டெண்டுல்கர் மட்டும் அதை ஆறு வழிகளில் அடித்து விடுவார் என கடந்த 2012ம் ஆண்டு பேட்டி ஒன்றில் ஷேன் வார்ன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய நிகழ்வை கமெண்ட் பக்கத்தில் போட்டு ரசிகர்களும் ஷேன் வார்னுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X