நம்பிக்கையோடு இருந்தேன்.. நெல்சன் தட்டிட்டார்.. ரஜினி பட வாய்ப்பு பற்றி வெங்கட் பிரபு ஓபன்

சென்னை:கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இதுவரை 6 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இப்போது விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார். செப்டம்பர் ஐந்தாம் தேதி படம் ரிலீஸாகும் சூழலில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தச் சூழலில் ரஜினி பட வாய்ப்பு மிஸ் ஆனது பற்றி வெங்கட் பிரபு பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க குடும்பங்களில் ஒன்று கங்கை அமரன் குடும்பம். அவர் இயக்கம், பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையை கொண்டவர். அவரது மூத்த மகன் வெங்கட் பிரபு நடிகராக சில படங்களில் நடித்தார். அதற்கு பிறகு சென்னை 600028 படத்தில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தை இளைஞர்களுக்கு ஏற்றவாறு கொடுத்து மெகா ஹிட்டை அள்ளினார். இதன் காரணமாக முதல் படத்திலேயே கவனம் பெற்றவராக மாறிவிட்டார் வெங்கட் பிரபு.

Vijay GOAT Venkat Prabhu

முன்னணி இயக்குநர்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய சரோஜா, கோவா ஆகிய படங்களில் சரோஜா சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. கோவா படம் நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதன் காரணமாக வெங்கட் இயக்கிய முதல் இரண்டு படங்களுக்கு கிடைத்த ரிசல்ட் கோவா படத்துக்கு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தா படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் வெங்கட் பிரபு.

மங்காத்தா, மாநாடு: மங்காத்தா படம் வெங்கட் பிரபுவின் கரியரை பீக்கிற்கு எடுத்து சென்ற படம். மெகா ப்ளாக் பஸ்டர் ஆன பிறகு அவர் இயக்கிய மாசு,பிரியாணி ஆகிய படங்கள் சறுக்கலை சந்தித்தன. சூழல் இப்படி இருக்க சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். டைம் லூப் கான்செப்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக அவர் இயக்கிய கஸ்டடி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

விஜய்யுடன் கூட்டணி: கஸ்டடி தோல்வி அவருக்கு கஷ்டத்தை கொடுத்தாலும்; அதற்கு மருந்திடும் வகையாக விஜய்யை வைத்து இப்போது GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார் வெங்கட் பிரபு. நிச்சயம் இந்தப் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் அவர். இதுவரை மூன்று சிங்கிள்கள் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும்; அடுத்ததாக வெளியான போஸ்டர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி கோட் படம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு பேட்டி: இதற்கிடையே ரஜினிகாந்த்தை வைத்து வெங்கட் பிரபு ஒரு படம் இயக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாருக்கு நான் ஒரு கதையை கூறினேன். அது அவருக்கும் பிடித்துவிட்டது. எனவே ரஜினியை இயக்குவது உறுதிதான் என்று நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை நெல்சன் பெற்றுவிட்டார். அந்த வாய்ப்பு எனக்கு மிஸ்ஸானது அப்செட்தான் என்றாலும் நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்ததில் மகிழ்சிதான்" என்றார். கோட் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X