விஜய்யை ஒழுங்காக பயன்படுத்தவில்லை.. ரொம்ப வேதனைப்படும் GOAT வெங்கட் பிரபு

சென்னை: விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் GOAT. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அந்தப் படம் வெளியானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதேசமயம் விஜய்யின் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் மிரள செய்தது. இருந்தாலும் படத்தில் ஏதோ ஒன்று மிஸ் ஆனதாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறினார்கள். இந்தச் சூழலில் இயக்குநர் வெங்கட் பிரபு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசியிருக்கிறார்.

சென்னை 600028 படத்தின் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு சரோஜா, மங்காத்தா என வரிசையாக ஹிட்டுகளை கொடுத்தார். அதிலும் அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அது அஜித் மற்றும் வெங்கட் கரியருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது. அதனையடுத்து வெங்கட் பிரபுவின் மவுசும் தமிழ் சினிமாவில் அதிகரித்தது. ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு பெரிதாக அவரால் எந்த ஹிட்டையும் கொடுக்க முடியவில்லை.

vijay venkat prabhu goat

GOAT: இப்படிப்பட்ட சூழலில்தான் விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. முதன்முறையாக விஜய்யுடன் அவர் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு எழுந்தது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதேசமயம் விஜய்யின் வில்லத்தனமான நடிப்பை பார்த்த ரசிகர்கள்; இப்படிப்பட்ட விஜய்யை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்று உற்சாகத்தில் மிதந்தார்கள். வசூலிலும் டீசண்ட்டான வரவேற்பை பெற்றது.

வெங்கட் பிரபு பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு வெங்கட் பிரபு அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "விஜய் மிகச்சிறந்த நடிகர். அவரை இந்த சினிமா சரியாக பயன்படுத்தாமல் ஒரு கமர்ஷியல் வட்டத்துக்குள் வைத்து அடக்கிவிட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. தனது மகன் ஜீவனை காணவில்லை என்று GOAT படத்தில் விஜய் அழும் சீனில் ஓவர் எமோஷனலாக நடித்துவிட்டார். நான் இன்னொரு டேக் கேட்டேன்.

அப்படி நடித்தார்: அவர் உடனே எதற்காக இன்னொரு டேக் என்று கேட்டார். நான் அதற்கு, 'உங்கள் மகன் மீண்டும் கிடைத்துவிடுவான் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும். அந்த எண்ணத்தோடு நடியுங்கள் என்று சொன்னேன். உடனே அவரும் மறு பேச்சு சொல்லாமல் நான் கேட்ட மாதிரி நடித்துக்கொடுத்தார். அந்த சீனுக்கு நாயகன் படம்தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. விஜய் அந்த சீனில் நடித்ததை பார்த்து ஸ்பாட்டில் இருந்த அனைவருமே கைகளை தட்டி விஜய்யை பாராட்டினார்கள்.

அடுத்த படம்: அதேபோல் சினேகாவிடமும் தனது மகன் இறந்ததை சொல்லாமலே புரிய வைக்க வேண்டும். அந்த சீனிலும் விஜய் அருமையாக நடித்திருப்பார்" என்றார். GOAT படத்தை முடித்திருக்கும் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அஜித்தை சந்தித்து அவர் கதை சொன்னதாகவும்; அதற்கு ஏகே ஓகே சொல்லிவிட்டார் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X