தளபதி ரசிகர்களுக்கு தியேட்டரில் தீபாவளியே காத்துட்டு இருக்கு.. தி கோட் படத்தின் கதை இதுதான்!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்குகியுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையயில் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு தெரிவிக்கவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.
படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என ஏற்கனவே படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் படம் ரிலீஸ் ஆக இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டாக படக்குழு வெளியிட்டு வருகின்றது. ஏற்கனவே படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்போவது இல்லை என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

இன்று மாலை ட்ரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் படத்தின் கதை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது. அந்த தகவலை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், தி கோட் படம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததைப்போல், முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்பது தெளிவாகின்றது.

கதை இதுவா? தி கோட் படத்தின் கதை என்பது கற்பனைக் கதைதான் என்றாலும் உண்மைக்கு நெருக்கமாக இந்த கதையை படமாக்கி இருக்கின்றோம். RAW அமைப்புடன் இணைந்து வேலை செய்யும் குழுவின் பெயர் SATS. இந்த குழுவுல இருந்த அனைவரும் ஒரு காலத்துல மிகவும் துணிச்சலாக செய்த செயல் ஒன்று இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னையாக அவர்களுக்கு எதிராக மாறி நிற்கின்றது. இந்த பிரச்னையை அவர்கள் எப்படி எதிர்கொண்டு வெல்கின்றார்கள் என்பதுதான் படத்தின் மைய்யக்கதை. படம் முழுக்க ஆக்ஷன்தான். தளபதி விஜய் ரசிகர்கள், தளபதியை எப்படியெல்லாம் பார்க்கவேண்டும் என நினைத்தார்களோ அவை அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கும். ரசிகர்களுக்கு படத்தில் பல சஷ்பன்ஸ் காத்திருக்கு. படத்துக்குள்ள வந்துட்டாலே ரசிகர்களுக்கு திருவிழாதான்" என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ மேக்ஸ்: படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தினை படக்குழு ஐ மேக்ஸ் ஸ்கீரினில் ரிலீஸ் செய்யவுள்ளது என்ற தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஐமேக்ஸ் ஸ்கீரின் தி கோட் படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்ற தகவல் தளபதி ரசிகர்களுக்கு ஏற்கனவே மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வெங்கட் பிரபு தரப்பில் இருந்து வெளியான தகவல் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











