கோட் பட காட்சிகளை வெட்டித்தான் 3 மணிநேரமாக்கினோம்.. ஓடிடியில் முழுப்படம்.. வெங்கட் பிரபு ஓபன்!

சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது கோட் படம். இந்த படத்தில் பல்வேறு சுவாரசியங்களை இயக்குனர் வெங்கட் பிரபு இணைத்து இருந்தார். அந்த வகையில் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்திருந்தனர்.

கோட் படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன் என கேமியோ கேரக்டர்களில் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் இவையெல்லாம் விஜய் ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தில் விஜய் -திரிஷா காம்பினேஷனில் வெளியாகியுள்ள மட்ட பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.

vijay goat movie venkat prabhu

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி சக்கைபோடு போட்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களிலேயே இந்த படத்தின் வசூல் 275 கோடிகளை தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் கலெக்ஷனை கோட் படம் எட்டியதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களை மிகச் சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகிறது. இந்தப்படத்தில் ரசிகர்கள் கொண்டாட பல விஷயங்களை வெங்கட் பிரபு இணைத்துள்ளார்.

கோட் பட பாடல்கள்: இந்த மெனக்கெடலை சிறிது திரைக்கதையிலும் செய்திருந்தால் கோட் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறி இருக்கும் என்பது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்தாக காணப்படுகிறது கோட் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா உள்ளிட்டவர்கள் இணைந்திருந்த நிலையில் 90களின் நாயகன் மோகன் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மாறியுள்ளார். படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்திருந்த நிலையில் மகன் கேரக்டருக்கு செய்யப்பட்ட டீ -ஏஜிங் ரசிகர்களை கவர்ந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படத்தின் நான்கு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கோட் படத்தின் ரன் டைம்: குறிப்பாக மட்ட பாடல் விஜய் -திரிஷா காம்பினேஷனில் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கேமியோ கேரக்டர்களில் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த படம் குறித்து அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வந்த வெங்கட் பிரபு படம் குறித்த சுவாரஸ்யம் ஒன்றையும் பகிர்ந்து இருந்தார். அந்த வகையில் கோட் படத்தின் நீளம் 3 மணி மற்றும்40 நிமிடங்களுக்கு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் திரையிடுவதற்காக படத்தின் நீளத்தை மூன்று மணி நேரங்களாக குறைத்ததாகவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

ஓடிடி குறித்து வெங்கட் பிரபு: தொடர்ந்து ஓடிடியில் டைரக்டர் கட்டாக படம் முழுமையாக ரசிகர்கள் காண கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மேலும் பல சுவாரசியங்களை ரசிகர்கள் ஓடிடி ரிலீசில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வழக்கம் போல விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடிவருகின்றனர். இதனிடையே விஜய்யின் தளபதி 69 படம் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. இதில் படம் குறித்த பல்வேறு யூகங்களை ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X